Sunday 26 August 2018

பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தாவரப்பெயர்கள்

பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தாவரப்பெயர்கள். 

1. அகரு – அகில், பரி. 12 – 5. Eagle wood. மணப்பொருள் தயாரிக்கப்படும் மரம்.
2. அகில் – ஒருவகை மரம், புறம். 337 – 10.
3. அடும்பு – மாக்கொடி அடும்பு, நற்.145 – 2 Hareleaf, கொடி வகை. அடம்பு
4. அணில்வரிக் கொடுங்காய் – வெள்ளரிக்காய், புறம். 246 – 4.
5. அதவம் – அத்தி மரம், அத்திப் பழம். நற். 95 - 3 -
6. அதிரல் – மாக்கொடி அதிரல் - காட்டு மல்லிகை, ஐங். அகம்.99-6 முதலியன. மோசி மல்லிகை – பரி.20 – 81. புனலிப்பூ குறி. 75
7. அம்பி – புழல்காளாம்பி, காளான், சிறுபாண்.134
8. அமை – மூங்கில், பதி. 54 – 3.
9. அரவிந்தம் – தாமரை. பரி. 12 – 78
10. அரலை – விதை, உருத்திராக்க விதை, அரலை மாலை சூட்டி, குறு. 214 – 6.
11. அரிசி – துவரை, புறம். 140 – 5.
12. அரையம் – அரை என்னும் மரம், அரச மரம். ஐங். 325 – 1
13. அல்லி – மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம், அல்லி, கழுநீர், பரி. 12-76 மற்றும் 77. - ஆம்பல் வகையில் சிறியதாகப் பூக்கின்ற நீர்ச்செடியினை அல்லி என்றும் அதன் பூவினை அல்லிப் பூ என்றும் நாஞ்சில் நாட்டில் குறிப்பிடுவர். அல்லிப்பூவின் இதழ் கூர்மையாக இருக்கும். ஆம்பலின் இதழ் கூர்மையாக அல்லாமல் வளைவுடனிருக்கும். நீர்நிலையின் ஆழமற்ற கரையோரமாகவும் ஆம்பல் ஆழமான இடங்களிலும் வளரும்.
14. அலரி – அலரிப்பூ (அரளி) எரி இதழ் அலரி, அகம். 191 – 2.
15. அவரை – அவரைக் கொடி, அவரைக் காய், மது – 299, குறி. 55,
16. அறுகை – மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகை, அறுகம்புல், குறு. 256 - 45
17. அனிச்சம் – அனிச்ச மரம் , கலி. 91 - 1
18. ஆசினி – ஒர் வகைப் பலா, அகம். 91 -12.ஈரப்பலா, மலை. 139, 526.
19. ஆத்தி – ஒரு வகைப் பூ, மரம், குறி. 87.
20. ஆம் – ஆச்சா மரம். கலி. 143. 29.
21. ஆம்பல் – நீர்ப்பூ, பரி. 12 – 78.
22. ஆம்பி – காளான், புறம். 164 - 2
23. ஆர் – ஆத்தி மரம், புறம். 43 – 13.
24. ஆரம் – சந்தன மரம். ஐங். 254 – 1.
25. ஆல் – ஆலமரம், புறம். 198 – 9.
26. ஆலம் – ஆலமரம். ஐங். 303 – 2.
27. ஆலும் – ஆலமரம், புறம். 58 – 2, 199 -1
28. ஆவிரை – ஆவாரம் பூ, குற்றுச் செடி. குறி. 71.
29. இகணை – மருத நிலத்திற்குரிய ஒரு மரம். விண்ணைத் தொடுமளவு உயர்ந்தும் கரிய அடியைக் கொண்டதுமான இம்மரத்தின் பசுங்கேழ் மெல்இலை அருகுநெறித்தன்ன கூந்தல் எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே இது சவுக்கு போன்ற ஊசியிலை மரமாக இருக்கலாம். புறம்.131 – 1. இதற்கான தரவுகள் திரட்டப்பட வேண்டும்.
30. இஞ்சி – ஒரு வகைத் தாவரம், மது. 289, பட். 19.
31. இண்டு – ஒருவகைத்தாவரம். இண்டங்கொடி, நற்.2 – 6.
32. இத்தி – புல் அரை இத்தி, அகம், 77 – 13, இச்சி மரம்.
33. இரங்காழ் – இரவ மரக்கொட்டை, அகம். 125 – 3. புறம். 276 – 2.
34. இரத்தி – இலந்தை, நற்.113 – 2.
35. இரவம் – இரவமரம், புறம். 281 – 1 இருள் மரம் Iron wood tree
36. இருப்பை – இலுப்பை, புறம். 384 – 7. அகம். 9 - 3
37. இல்லம் – தேற்றா மரம். நற். 376 – 6. அகம். 4. - 1
38. இலஞ்சி – மகிழமரம். ஐங்.94 – 3.
39. இலவம் – இலவமரம், ஐங்.320 – 1, நற். 105 – 1, அகம். 11 – 3. இலவம் பஞ்சு.
40. இற்றி – இத்தி மரம், ஐங். 279 – 1, இச்சி, நற். 162 – 9. நெடுவீழ் விழுது இற்றி, அகம். 345 – 19, புல் வீழ் இற்றி, புல்லிய விழுதுகளைக் கொண்ட இற்றி – குறு.106 – 1.
41. இறடி – தினை வகை, கருந்தினை, குறு.214 – 2
42. இன்குளகு – அதிமதுரத் தழை, முல்லை. 32.
43. இன்நீர்ப் பசுங்காய் – பச்சைப்பாக்கு, மது. 400
44. ஈங்கை – ஒரு வகை மரம் நற். 2 -6, 79-1, ஈண்டம்பூ, குறி. 86. கொடுமுள் ஈங்கை. நற்
45. ஈந்து – ஈச்சமரம், ஐங். 2- 2. நற். 2 - 2
46. உகாய் – புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅத்து இறவுச் சினை அன்ன நளிகனி, ஒரு வகை மரம். குறு. 274 - 1
47. உடை – உடைமரம், புறம். 324 – 4, 363 – 2.
48. உந்தூழ் – பெருமூங்கில், குறி. 65, மலை.133.
49. உயவை – ஒரு வகைக் கொடி, மலை. 136. காக்கணம்
50. உழிஞை – உழிஞை மலர். கலி. 140 – 4 முடக்கொற்றான், சிறுபூளை
51. உழுஞ்சில் – வாகை மரம், அகம். 45 -1 முதலியன.
52. உழுந்து – செங்கால் உழுந்து, குறு. 68 -1, அகம்.86 – 1, மயிர்க்காய் உழுந்து, நற். 89 – 5.
53. உள்ளி – வெங்காயம், பூண்டு, நெடு. 122.
54. உன்னம் – உன்னமரம். பதி. 40 – 7. (சித்ர உன்னு என்றும் வழங்கப்படும்.  இதன் வயிரம் கண்ணைக்கவரும் வகையில் கருந்தவிட்டு நிறத்தில் இருக்கும். மண்வெட்டிக்கை, மேழி எனப்படும் கலப்பையின் கைப்பிடி, கட்டில் கால்கள் செய்வதற்கு இம்மரக்கட்டைகளைப் பயன்படுத்துவர்.)
55. ஊகு – ஊகம் புல், அணில் வால் போல் பூக்கும்
ஊகம் என்பதாலும் இதன் குச்சியைச் சிறுவர் அம்பாகப் பயன்படுத்துவர் எனக் குறிப்பதாலும் இது நாணற் புல்லாக இருக்கலாம். புறம். 307 – 4,5.
56. எண் – எள், மலை. 106
57. எரிக்கொடி – சோதிக்கொடி, ஐங். 353 – 1 balloon-vine முடக்கொற்றான்.
58. எரிமலர் – தாமரை, பரி. 1-6, 9-4.
59. எரிநகை – வெட்சி மலர். பரி. 13 – 59
60. எருக்கம் – எருக்கு, புறம். 106 – 2.
61. எருக்கு – நற். 152 – 2
62. எருவை – எருவை நறும் பூ, கொறுக்கச்சி, நற்.261 – 9.
63. எருவை – பஞ்சாய்க்கோரை, குறி. 68, மலை – 224.
64. எறுழ் – எறுழமரம், ஐங். 308 – 3. செந்நிறப் பூவுடைய குறிஞ்சி நில மரம்.
65. ஏனல் – தினை, மலை 108. தினைப் பொதுப்பெயர், குறு.357 – 5.
66. ஏழில் – ஒருவகைப் பாலை மரம். குறு.138 – 2.
67. ஐயவி – சிறுவெண்கடுகு, நற். 40 – 7.
68. ஐவனம் – ஒரு வகை நெல், நற். 373 – 4. மலைநெல், குறு. 100 – 1.
69. ஒடு – ஒடு மரம். ஒடுங்காழ்ப் படலை, (கதவு) புறம்.325 -7 நிலப்பாலை.
70. ஒண்பூ – நீத்துடை நெடுங்கயம் தீப்பட மலர்ந்த கடவுள் ஒண்பூ – செந்தாமரை, பெரும்பாண்.289, 290.
71. ஓமை – ஒரு வகைப் பாலைநில மரம். ஐங். 316 – 4. குறு.79-2
72. கஞ்சகம் – கறிவேம்பு, கஞ்சக நறுமுறி – நறுமணமுள்ள கறிவேப்பிலை. பெரும்பாண்.328
73. கடம்பு – கடம்ப மரம். பதி.11 – 12.
74. கடலை – நறுநெய்க்கடலை விசைப்ப, புறம். 120 - 14 நவதானியங்களில் ஒன்று, கொண்டைக்கடலை, Bengal gram.
75. கடிப்பகை – வெண்சிறுகடுகு, மலை. 22
76. கடு – கடுக்காய். மலைபடு. 14. கடிக்கலித்தெழுந்த கண்ணகன் சிலம்பில்
77. கடுக்கை – கொன்றை மரம், அகம். 393 – 15.
78. கண்டல் – தாழை, நற். 54 – 11
79. கண்ணி – போர்ப்பூ, தும்பைப்பூ மது. – 506.
80. கண்பு – ஒரு வகைக் கோரை, மது – 172, சம்பங்கோரை, புறம். 334 – 1. சிறுவர், இதன் காயை முறித்து அதன் சுண்ணத்தைத் தம் மார்பில் பூசிப் பொன் உரைக்கும் கல் போலத் தோன்றுவர். பெரும்பாண்.220- 221. சம்பங்கோரை பாய் பின்னுவதற்குப் பயன்படும்.
81. கணவீரம் – செவ்வலரி, அரளி. முருகு. 236.
82. கணிகாரம் – கோங்கு மரம். கலி. 143 - 5
83. கமுகு – பாக்குமரம். நெடு. 23. கணைக்கால் கமுகு – அகம். 335 -
84. கரந்தை – ஒரு வகைப் புதர்ப்பூ, குறி. 76., புறம்.269
85. கருணை – கருங்கண் கருணை, கருணைக்கிழங்கு பொரியல், நற்.367 - 3
86. கரும்பு – இலங்கு பூங் கரும்பு, அகம். 13 .- 22
87. கருவிளை – காக்கணம்பூ, குறு. 110 – 4, பீலி ஒண்பொறிக் கருவிளை. (சங்குப்பூவில் நீலநிறம்.) கருவிளைக் கண் போல் மாமலர், நற். 262 - 1
88. கல்லகாரம் – குளிரிப்பூ, பரி. 11 – 103. பெரிய இலை கொண்ட சிறுவகை நீர்ச்செடி
89. கலிமா – கடிகமழ் கலிமா, மணம் வீசும் தழைத்த மாம் பூ, குறி. 76.
90. கவலை – ஒருவகைக் கிழங்கு, குறு. 233 – 1.
91. கவிர் – முள்முருங்கை, அகம். 3 - 15. கலி.22 – 29 (கலியாண முருங்கை என்றும் பெயருண்டு.) 
92. கழல் – கழல் முள் வேலி, புறம். 306 கழற்சி. கழற்கனி – கழற்சிக்காய் புறம். 97 – 23 மரக்கழச்சி.
93. கழுநீர் – நீர்ப்பூ நற். 260 – 1.
94. கழை – மூங்கில் குறு. 54 – 3. கரும்பு, குறு. 180 – 4.
95. கள்ளி – நொடி விடுவன்ன காய் விடு கள்ளி, நற்.314 – 9, அகம். 97 - 1
96. களவு – களாமரம், களவுப் புளி – களாப்பழப் புளிச்சுவை, புறம். 328 - 8
97. கழை – மூங்கில். பதி. 41 – 14.
98. கறி – மிளகுக் கொடி. பரி.16 – 2.
99. காஞ்சி – பூவரசு மரம். பதி.62 – 15
100. காந்தள் – செங்காந்தள், நற்.188 – 4 கார்த்திகைப் பூ, Malabar Glory lily.
101. காம்பு – மூங்கில், நற். 51 – 2, 55 - 2
102. காயா – ஒரு வகை மரம். அகம். 108 – 14
103. காரை – முட்கால் காரை, புறம்.258 - 1
104. காவி – கருங்குவளை, அகம். 350 - 1
105. காழ்வை – அகில், குறி. 93.
106. கானக் குமிழ் – காட்டில் வளரும் குமிழ மரம். சிறுபாண். 225.
107. கிடை – தாழ்நீர் அயமருங்கின் சிறுகோல் வெண்கிடை – நெட்டி புறம். 75 – 7, 8 தொப்பி தயாரிக்கப் பயனாகும் ஒருவித நீர்த்தாவரம் நன்கிடை- நிறமூட்டப்பட்ட நெட்டி, பரி. வையை. 35 வெண்கிடை மிதவையர், நன்கிடைத் தேரினர். நெட்டியால் செய்யப்பட்ட தெப்பம்.
108. கீரை – கீரைவகைகளின் பொதுப்பெயர். புறம். 159 - 8
109. குடசம் – ஒருவகைப் பூ (வெட்பாலை) குறி. 67
110. குப்பைக்கீரை – குள்ளத் தண்டுக்கீரை, அறைக்கீரை, புறம். 159 – 8.
111. குமிழ் – குமிழ மரம். கொடுமூக்கு விளைகனி, நற். 6 – 7, 274 – 5.
112. குரவம் – குரா என்னும் மரம், ஐங்.344-2
113. குரவு – குராமரம். நற்.56 – 1
114. குருக்கத்தி – நற். 97 – 6
115. குருகிலை, முருக்கிலை, குறி. 74.
116. குருகு – குருக்கத்தி, கலி. 15 – 41.
117. குருந்து – குருந்த மரம், ஐங். 436 – 3.
118. குல்லை – கஞ்சங்குல்லை என்னும் பூ, கலி. 103 – 3. துளசி, 12 – 79. கஞ்சாச்செடி. பொரு.234. பத்துப்பாட்டு – 1 உரை. பக்கம். 132.
119. குவளை – ஒரு வகை நீர்ப்பூ பரி.11 – 97. அரக்கு இதழ்க் குவளை – செங்குவளை (அரக்காம்பல்), பெரும்பாண். 294.
120. குளகு – அதிமதுரத் தழை, குறு. 136 - 4
121. குளவி – காட்டு மல்லிகை, 51 – 8, மலைப்பச்சை செடி. 119 – 8.
122. குறிஞ்சி – கருங்காற் குறிஞ்சி, நற்.268. – 3
123. குறுநறுங்கண்ணி – குன்றி, குறி.72.
124. குன்றி – குன்றிமணி, குறு. கடவுள் வாழ்த்து - 3
125. கூதளம் – கூதிர் காலத்தில் மலரும், நற்.244 – 2 குளவியொடு கூதளம் குழைய, புறம். 380 - 7 கூதளம், கூதாளம், கூதாளி, கூதளி அனைத்தும் தூதுளை என்னும் தூதுவளையைக் குறிக்குமெனத் தமிழ் பேரகராதியிலிருந்து தெரிய வருகிறது.
126. கூதளி – கூதளம், குறு. 60 – 1, கூதாளி
127. கூவிரம் – வில்வம், குறி.66
128. கூவிளம் – வில்வம், நற். 119 – 9.
129. கூவை – ஒரு வகைக் கிழங்கு , மது. 142.
130. கைதை – தாழை, குறி. 83.
131. கொக்கு – மாமரம். குறி.188.
132. கொகுடி – ஒரு வகை முல்லை, குறி. 83
133. கொட்டைப் பாசி – நீர்ப்பாசியில் ஒரு வகை. பாசியின் வேர் ஒத்த ஆடை அழுக்கு. பொரு. 153, பெரும்பாண். 468.
134. கொள் – காணம் என்னும் பயறு வகை, கொள்ளொடு பயறு பால் விரைஇ. அகம். 37
135. கொன்றை – சரக்கொன்றை மரம். பதி. 67 – 13.
136. கோங்கம் – கோங்கமரம், ஐங். 343-2.
137. கோங்கு – கோங்க மரம் , பரி. 19 – 79.
138. கோடல் – வெண்காந்தள், நற். 99 – 9, வெண்கோடற்பூ குறி. 83
139. கோளி – பூவாது காய்க்கும் மரம். புறம்.58 – 2, 254 – 7. பழுனிய கோளி ஆலம் – பழுத்த ஆலமரம்.
140. கௌவை – எள்ளிளங்காய் – மலை. 105.
141. சண்பகம் – குறி. 75.
142. சண்பு – சண்பங்கோரை. சம்பங்கோரை
143. சந்து – சந்தன மரம், அகம். 59 – 12.
144. சாத்தம் – சந்தனம், ஐங். 212 – 1.
145. சாந்தம் – சந்தன மரம். பதி.88- 30.
146. சாந்து – சந்தன மரம், நற். 1 – 4
147. சாய் – கோரை , நற். 60 – 9. பௌவ நீர்ச் சாய் - தண்டாங்கோரை, கலி.76 – 7, இருஞ்சாய் –கரிய நிறமுடைய தண்டாங் கோரை, ஐங்.18 - 1
148. சாலி நெல் – நெல்லில் ஒரு வகை. சாலி என்ற சொல்லுக்கு மரா, சீமை வேல், குடைவேல், கூந்தல் வேல் எனப் பல்பொருளிருப்பதால் சாலி நெல்லெனக் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்நெல் எனப்படும் சம்பா ரகத்தையே இது குறிக்கிறது. பொரு.246.
149. சிலை – ஒரு மரம். ஐங்.363 – 1, அம்சிலை வல் வில் - வில் செய்வதற்குப் பயன்படும் மரம். கலி. 15 -1
150. சிந்துவாரம் – கருநொச்சி, குறி. 89
151. சிறுசெங்குரலி – கருந்தாமக் கொடிப்பூ, குறி.82. நீர்க்கொடிப் பூ, ஒண் செங்குரலித் தண்கயம் கலங்கி, புறம்.283 – 1.
152. சிறுசெங்குவளை பதி.52 – 2
153. சிறுதினை – தினையின் வகை – ஏனல்அம் சிறுதினை – ஏனல் தினையின் பொதுப்பெயர், குறு. 357 – 1 சிறுதினை, சிறிய கால அளவில் விளையும் தினை, குறு.375 - 3
154. சிறுபசு மஞ்சள் – மஞ்சளில் ஒரு வகை, முருகு. 235.
155. சிறுமாரோடம் – குறி. 78.
156. சுரை – சுரைக்கொடி, பதி.15 - 9
157. சூரல் - ஒரு வகைக் கொடித் தாவரம், குறி. 42, 71 சூரை, பிரம்பு.
158. செங்கழுநீர் – செங்கழுநீர் மாலை அணிதல் அகம் 48 – 8
159. செங்குரலி – நீர்க் கொடி , புறம். 283. 1
160. செச்சை – வெட்சி, அகம். 48 - 10
161. செந்தினை – குறு. 335 - 2
162. செந்நெல் – செந்நெல் புறம், 344 – 1
163. செம்பூ – செந்நிறப் பூ உள்ள செடிவகை (செம்பருத்தி)
164. செம்மல் - சாதிப்பூ, குறி. 82. காயாஞ்செம்மல், அகம். 14 - 2
165. செம்மருது – மருத மரத்தில் ஒரு வகை, Indian blood wood tree, பொரு. 189. பிள்ளை மருது, புல்ல மருது, பூமருது என்றும் அழைக்கப்படுவது. சிவப்பு நிறப்பூக்களை உடையது.
166. செம்முக வாழை – செவ்வாழை – அகம்.302 - 1
167. செயலை – அசோக மரம், ஐங். 211 – 3.
168. செருந்தி – ஒருவகை நெய்தல்நில மரம், கலி. 26 – 2, 127 – 2. மணத்தக்காளி ( தமிழ் அகர முதலி), வாட் கோரைப்புல், மது. 172, நெட்டிக் கோரை, ஐங். 18 - 1
169. செருவிளை – வெண் சங்கு மலர் – குறி. 68. காக்கணங் கொடி.
170. சேடல் – பவளக்கால் மல்லிகை, குறி. 82.
171. சேப்பு – சேப்பங்கிழங்கு, கலி. 41 – 2.
172. சேம்பு – சேப்பங்கிழங்கு, 41 – 2.
173. ஞாழல் – புலிநகக் கொன்றை. பதி. 51 – 5.
174. ஞெமை –ஒருவகை மரம். குறு. 285–6. வெண்ஞெமை, அகம்.145-5
175. தகரம் – ஒருவகைமரம் (மணமுடையது), புறம். 132 – 6. பரி. 12 – 6 கூந்தலுக்கு இடும் மயிர்ச்சாந்து. நெடு. 55.
176. தகைசெய் தீஞ்சேறு – கருங்காலிக் கட்டையைச் சீவிக் காய்ச்சிய களி, மது. 400.
177. தடவு – ஒருவகை மரம். குறு. 160 – 3.
178. தணக்கம் – ஒரு வகைப் பூ, குறி. 85.
179. தமாலம் – சந்தன மரத்தில் சுற்றி வளரும் ஒருவகைக் கொடி. நற்.292 - 2
180. தருப்பை – நாணல், பெரும்பாண்.264.
181. தளவம் – புதல் இவர் தளவம், முல்லை. நற்.242 – 2.
182. தளவு – முல்லை , நற்.242 – 2.
183. தாமரை – சுடர்ப் பூந்தாமரை, அகம். 6 - 16
184. தாரம் – தேவதாரு மரம். பரி.12 – 6
185. தாழை – தாழைமரம். பதி. 55 – 5.
186. தாளி – ஒருவகை அறுகம்புல் குறு.104 – 3. அள் இலைத் தாளி அடர்ந்த தாளி இலை, புறம். 252 3
187. தாளிதம் – ஒருவகைக் கொடி பரி.10 – 10.
188. தானை – பனை, நற். 18 – 5.
189. தில்லை – ஒருவகை மரம். ஐங்.131 – 2.
190. திலகம் – மஞ்சாடி மரம், குறி. 47, மரப்பூ மலை.520.
191. தினை – சிறு தானியத் தாவரம். 15 – 47.
192. துடரி – இலந்தைப்பழம் jujube tree. புறம். 177 – 9 தொடரி.
193. தும்பை – பாசிலைக் கவிழ்பூந் தும்பை, புறம். 283, குறி. 90.
194. துழாய் – துளசி., பரி.4 – 58.
195. துளவம் – துளசி, பரி. 13-29
196. தெங்கு – தென்னை
197. தெற்றி – மரவகை தெற்றி உலறின்
198. தெறுழ் – புளிமா, புறம். 119 – 2.
199. தெறுழ் – ஒருவகை காட்டுக்கொடி, நற். 302 – 5.
200. தேக்கு – தேக்கு மரம், அகம்.107 -10
201. தேமா – குறி. 64. தேமாம்பூ
202. தொடரி – முள் உடுத்து எடுகாடு, விடத்தேர், தொடரி போன்ற முள்ளுடை மரங்களை வேலியாக அமைத்த காடு, பெரும்பாண். 184, 185. (தொடரி என்பது கொடுமுட் தொடரி என பெருங்கதையிலும் குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பேரகராதி)
203. தோடு – தாழம்பூவின் இதழ், அகம். 191 - 3
204. தோரை – ஒருவகை நெல் மூங்கில் நெல் மது. 287, மலை. 121
205. தோன்றி – மருதோன்றி, அகம். 94 – 5. செங்காந்தள், அகம்.164 – 6, பரி. 14 – 15.
206. நகை – வெட்சி மலர், பரி. 13 – 59.
207. நந்தி – நந்தியாவட்டை, சிறு பூமரம். குறி.91.
208. நரந்தம் – ஒருவகைப்புல், பரி. 17 – 11.
209. நரந்தம் – நாரத்தம் பூ, நாரத்தை மரம், குறி. 94., புறம். 302 – 4.
210. நள்ளிருள் நாறி – இருவாட்சி, குறி. 94.
211. நறவம் – ஒருவகை மரம், பரி. 12 – 80. நறைக்கொடி குறி. 91.
212. நறவு – நறாம் பூ கலி. 54 – 9. நறவின் சேயிதழ் அகம். 19 – 9,10
213. நறும்புல் – ஒருவகைக் கொடி, புறம், 168 - 15
214. நறுமா – நறிய மாமரம். குறு. 73 – 3.
215. நறுமோராடம் – செங்கருங்காலி, 337 – 5.
216. நறை – அகில் , பரி. 14 – 20.
217. நறை – ஒரு வகைக் கொடி, ஐங்.276 – 2.
218. நாகம் – ஒரு வகை மரம், பரி. 12 – 4, நாகப்பூ (புன்னைப் பூ) குறி. 94, சுரபுன்னை கலி. 39 – 3, இலாமிச்சை வேர்.
219. நாணல் – நாணற் கிழங்கு, அகம். 212 – 5.
220. நாவல் – புன்கால் நாவல், நற். 35 – 2.
221. நீடுகொடி இலை – வெற்றிலை, மது. 401.
222. நீலம் – குவளை. நற்.161 – 2. நீர்க்கொடி, கலி.14 – 2. கருங்குவளை.
223. நுணவம் – நுணா மரம், மஞ்சணத்தி மரம், ஐங். 342 – 3.
224. நுணவு – நுணா மரம், அகம். 345 – 16.
225. நூறை – நூறைக்கிழங்கு. காஅய்க்கொண்ட நுகம் மருள் நூறை காவடியாகச் சுமந்து செல்லும் நுகத்தடியோ என மருளுமளவுக்கான நூறைக் கிழங்கு. மலை. 515
226. நெய்தல் – மலர், நற். 8-8. கருங்குவளை, குறி. 84.நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூ, நீரில் வாழ்கின்ற உட்துளை நெய்தலின் பூ, ஐங்.109 - 2
227. நெருஞ்சி – மலர், தரையில் படரும் முட் கொடி. குறு. 202 - 2
228. நெல் – கழனி நெல், அகம் 13 – 19, பிண்ட நெல் அகம். 6 – 5 முதுபாழ் உகுநெல் – போர் முடிந்த களத்தில், மனிதரால் விளைவிக்கப் பெறாமல், முதிர்ந்த பாழ்நிலத்தில் தானே விளைந்து உதிர்ந்த நெல், நற்.384 - 5
229. நெல்லி – நெல்லிமரம், அகம். 5- 9, 284 – 1.
230. நொச்சி – நொச்சி மரம் , அகம். 23 – 11 மயிலடி அனைய மாக்குரல் நொச்சி அணிமிகு மென் சினை ஊழ்த்த மணிமருள் பூவின் பாடு நனிகேட்டே, நடு இரவில் நொச்சிப்பூ உதிரும் ஓசை கேட்டேன். குறு. 138, நற். 115 - 5
231. பகன்றை – ஒருவகைக் கொடி மலர். (சிவதை) நற். 86 - 3
232. பசும்பிடி – பசும்பிடி இள முகிழ், பரி.19 – 75. பச்சிலை, குறி. 71. பதி. 81 – 25 (நாஞ்சில் நாட்டில் கொழுந்து எனக் குறிப்பிடும் மருக்கொழுந்து அல்லது பச்சை எனக் குறிப்பிடும் திருநீற்றுப்பச்சை எனக் கொள்ளலாம்.)
233. பண்ணை – பண்ணை வெண்பழத்து அரிசி – பண்ணைக்கீரையின் விதை வரகரிசியை ஒத்திருக்கும், அகம். 393 - 9
234. பணை – மூங்கில். பதி.21 – 37.
235. பதவம் – அறுகு, அறுகம்புல், கலி. 109 – 2.
236. பதுமம் – தாமரை பரி. 5 – 49.
237. பயறு – அகம். 37 – 12. பாசிலை அமன்ற பயறு, அகம். 262 - 4
238. பயினி – ஒருவகைக் குறிஞ்சி நில மரம், குறி.69
239. பரீஇ – பருத்தி. குறு. 72 – 4.
240. பருத்தி – பருத்தி வேலிச் சீறூர், புறம். 299 - 1
241. பரேரம்புழகு – செம்பூ, புனமுருங்கை, குறி. 96.
242. பலவு – பலாமரம். நற். 26 – 6, ஆய்சுளைப் பலவு அகம். 7 – 20
243. பலா – பலாமரம், பலா அமல் அடுக்கம். அகம்.8 - 7
244. பலாசம் – புரச மரம், குறி. 88
245. பவர் – ஒரு கொடி வகைத் தாவரம். நற். 5 -3.
246. பழனவெதிர் – கரும்பு, ஐங். 91 – 4.
247. பளிங்கு – ஒரு வகைக் கற்பூர மரம் மலை. 516.
248. பறவைப் பெயர்படு வத்தம் – கருடன் சம்பா, இராசாவன்னம், மின்மினி போன்ற நெல்வகை. பெரும்பாண்.305
249. பன்னல் – பருத்தி, புறம். 345 - 20
250. பனை – பனை மரம். நற்.126 - 6
251. பாகல் – பலாமரம். நற்.180 – 1.
252. பாகல் – பாகற்பழம் மயில் உண்ணும். கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகல், அகம். 15 – 4. சிறுகொடிப் பாகல், புறம். 399 - 6
253. பாங்கர் – ஓமைமரம். குறி. 85.
254. பாசி – நீர்ப்பாசி, குறு. 399 – 2. நுண்நீர்ப்பாசி, மலை. 221.
255. பாசு – மூங்கில், ஐங். 446 – 3.
256. பாதிரி – பாதிரி என்னும் பாலை நில மரம் அகம். 99-6. ஐங். 346 –2
257. பாரம் – பருத்தி, நற்.41 – 4. பருத்திப் பூ, குறி. 92.
258. பாலை – வெண்பாலை மரம். நற்.107 3 குறி. 77
259. பாவை – இஞ்சிக் கிழங்கு, மலை. 125.
260. பிடவம் – இலையில பிடவம் ஈர்மலர் அரும்ப, நற்.242 - 1
261. பிடவு – ஒருவகை பூமரம். பதி. 66-17.
262. பிண்டி – அசோகு, பரி. 11 – 95.
263. பித்திகம் – சிறுசண்பகம், நற்.314 – 3. பிச்சிப்பூ, குறு. 94 – 1.
264. பித்திகை – சிறுசண்பகம், நற். 97 – 7.
265. பிரண்டை – பிரண்டைக் கொடி, புறம்.119 - 5
266. பிரம்பு – பிரப்பங்கொடி அகம். 6 – 19
267. பிரம்பு – நீர்நணிப் பிரம்பு, பெரும்பாண். பிரம்பு
268. பீர் – பீர்க்கு – நற்.197 – 2
269. பீரம் – பீர்க்கு குறி. 92.
270. பீரை – பீர்க்கங்கொடி, புறம். 116 – 6.
271. புகழா வாகை – புகழா வாகைப் பூவின் அன்ன வளைமருப்பு ஏனம், அகத்திப் பூப் போன்ற வளைமருப்பினையுடைய பன்றி. பெரும்பாண் 109, 110
272. புட்டில் – தக்கோலக்காய். தக்கோலம் என்பது தாம்பூலத்தையும் குறிக்கும். அப்படியெனில் பாக்கு ஆகிய கமுகின் காயும் புட்டி வடிவத்தில் உள்ளது, சாதிக்காயும் சில பூக்களையும் கொண்ட தலையணி மாலையில் இந்த அம்பொதிப் புட்டிலும் இருந்த தாகப் பாடப்பட்டுள்ளது. வால் மிளகு, நாவல், சிறு நாவல் என்பனவும் தக்கபோலம் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றன. முருகு. 191.
273. புழுகு – மலையெருக்கு, மலை. 219.
274. புழுக்கு – புழுக்க வேண்டிய அவரை, துவரை முதலியன, பதி. 18 - 3
275. புல் – முளி புல், உலர்ந்த ஊகம்புல், அகம். 39 - 8 முற்றா இளம்புல், குறு. 204 - 3
276. புல் - மூங்கில் அகம். 65 – 15
277. புல் – தருப்பைப்புல், புறம். 234 - 1
278. புளி – புளிய மரம், புளியங்காய், நற் 374 - 3
279. புன்கு – புங்க மரம். நற். 9 – 5 பொரிப் பூம் புன்கு. குறு. 341 - 2
280. புன்னாகம் – புன்னை, பரி. 11 – 16.
281. புன்னை – புன்னை மரம், ஐங்.103 – 1. அகம். 10 - 3
282. பூவை – பறவாப் பூவை, பரி. 3 73, காயா மலர், பரி. 4 – 29. மலர்ப் பூவை, பரி.13 – 42.
283. பூழில் – அகில், ஐங்.212 – 1.
284. பூளை – ஒரு வகை மலர். கலி.138 – 9. ஒரு வகைச் செடி, பட். 235
285. பெண்ணை – பெண் பனை, ஐங் 114 – 4.
286. பெருவாய் மலர் – இருவாட்சி, பதி.81 – 25.
287. பைங்காய் – பந்தலின் கண் படர்ந்த சுரை, பாகல், புடலை போன்ற பசிய காய், பெரும்பாண்.267
288. பைஞ்சாய் – நீரில் வளரும் பஞ்சாய்க் கோரைப்புல், அகம். 62 - 1
289. பொதி – மூங்கில், புறம்.253 – 4.
290. போங்கம் – மஞ்சாடிப் பூ, குறி. 74.
291. போந்தை – பனைமரம். பதி. 51 – 9.
292. மகிழம் – மகிழமரம், பரி. தி. 1 – 7.
293. மஞ்சள் – நறுவிரை மஞ்சள், அகம். 269 – 9 சிறுபசு மஞ்சள், முருகு. 235
294. மணிச்சிகை – செம்மணிப்பூ குறி. 64.
295. மயிலை – இருவாட்சி, புறம்.342 - 2
296. மரல் – கலி.13 – 5. மருள், ஒருவகைக் கற்றாழை. நற்.64 – 4.
297. மரவம் – வெண்கடம்பு, ஐங்.357 – 1
298. மராஅம் – செங்கால் மராஅம், மராமரம், செங்கடம்பு, நற்.148 - 5
299. மராஅம் – வெண்கடம்ப மரம், ஐங். 348 – 2.
300. மருதம் – மருதமரம். பதி.27 – 6.
301. மருது – மருதமரம். பதி.13 – 7 இருள் புனை மருதின் நிழல், நற்.330 - 5
302. மல்லிகை – பரி. 12 – 77
303. மலைவாழை – நற் 232 - 3
304. மனை மரம் – இல்லம் என்னும் மரம், தேற்றாமரம், பரி. 11 - 19
305. மா – மாமரம், ஐங். 355 – 5.
306. மாஅ – மாமரம், ஐங். 10-4.
307. மாணை – ஒருவகைக் கொடி, குறு. 36 – 1.
308. மாதுளம் – மாதுளத்து உருப்புறப் பசுங்காய், மாதுளங்காய், பெரும்பாண். 306, 307.
309. முஞ்ஞை – முன்னைக் கொடி, புறம். 320 -1 முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல் முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு, முன்னைக் கீரை, புறம் 197 - 11
310. முசுண்டை – முசுட்டை ஒருவகைக் கொடித் தாவரம், மது. 281. முசுட்டைக்கீரை
311. முடிநாறு – நாற்று முடி, நெல் நாற்று, பெரும்பாண்.212
312. முண்டகம் – நீர்முள்ளி, நற். 191-9 முண்டகம் வேய்ந்த குறியிரைக் குரம்பை – நற். 207 2, கழிமுள்ளி மது. 96
313. முதிரை – அவரை, துவரை முதலியன, பதி. 55 – 7.
314. முருக்கு – முருங்கை மரம், நற். 73 - 1
315. முருக்கு – முள்முருங்கை, புறம். 169 – 10
316. முருங்கை – நார் இல் முருங்கை, வெண்பூ, அகம். 1
317. முல்லை – முல்லைக் கொடி, நற், 59 - 2
318. முள்ளி - நீர்முள்ளி. கூன்முள் முள்ளி, அகம். 26 – 1. முட்சினை முகை சூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக் கொடுங்கால் மாமலர்- மலரின் வாய் மடிந்திருத்தலால், பிறழ் வாய் என்றும்செடியின் தாள்களில் முட்கள் இருப்பதால் `முட்சினை` என்றும் கிளைகள் வளைந்திருப்பதால் `கொடுங்கால்` என்றும் மலர் பெரியதாக இருப்பதால் மாமலர் என்றும் செடியையே ஓவியமாகக் காட்டியுள்ளார், புலவர். பெரும்பாண்.
319. முள்அரைத் தாமரை – வெண்தாமரை, சிறுபாண். 183.
320. முளரி – தாமரை, அகம்.163 – 8.
321. மூங்கில் – பைங்கண் மூங்கில் , நற். 28 – 7.
322. மௌவல் – காட்டு மல்லிகை, முல்லை. பரி. 12 – 77.
323. யா – யாமரம். ஐங்.388 – 2, ஆச்சா மரம். கலி.143-30.
324. யாஅ – யாமரம், அகம். 31 – 5.
325. யாஅம் – யாமரம். நற்.186 - 7
326. வகுளம் – மகிழம்பூ, குறி. 70, பரி. 12 - 79
327. வஞ்சி – ஒருவகை மரம், அகம். 226 – 9. (வஞ்சிக்கொடி, ஆற்றுப்பாலை மரம், படர் கொடிவாகை, ஆற்றிலுப்பை மரம்)
328. வடவனம் – மரவகை (வாகை) குறி. 67.
329. வயலை – பசலைக் கொடி, நற். 179 – 1. புனிற்று வளர் பைங்காய் வயலைச் செங்கொடி களவன் அறுக்கும், ஐங்.25 – 1,2. சிவப்பு நிறமுள்ள கொடி, பசுங்காயினை நண்டு உண்ணும். எனவே இது சிவப்புப் பசலைக் கொடி என்பது நன்கு விளங்குகிறது.
330. வயலை – வெள்ளை வயலைக் கொடி, நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன வயலை – உழுந்தின் மாவினை நெய்யொடு கலந்து பிசைந்து கையால் தட்டிப் பரப்பியது போன்ற வயலை. (வெள்ளைப் பசலை.) ஐங். 211 - 1,2
331. வயிர் – மூங்கில், ஐங். 395 – 1.
332. வரகு – கவைக் கதிர் வரகு, புறம். 215-1, வெள்வரகு.
333. வரை – மூங்கில், பட். 138.
334. வழுதுணை – வழுதுணங்காய், அகம்.227 – 17.
335. வழை – சுரபுன்னை. பதி. 41 – 3.
336. வள்ளி – வள்ளிக்கொடி, பூ, பரி. 21 – 10. வலந்த வள்ளி, மரம் ஓங்கு சாரல், அகம். 52 - 1
337. வள்ளிக்கிழங்கு – புறம்.109 – 6 கொடுங்கொடி வள்ளிக்கிழங்கு.
338. வள்ளை – நீர்க் கொடி, மது. 254. அம் தூம்பு வள்ளை, அகம். 6 – 17, செறுவின் வள்ளை- வயலில் படர்ந்த வள்ளைக் கீரை, புறம் 399 - 6
339. வளகு – ஒருவகை மரம். இதன் தழையினை யானை விரும்பிய அளவுக்கு உண்ணும். கலி. 43 – 20.
340. வற்றல் – ஒரு வகை மரம், அகம். 145 - 3
341. வன்னி – வன்னி மரம், வன்னியம் துடுப்பு, புறம்.372 - 7
342. வாகை – வாகை மரம். பதி.40 – 15.
343. வாழை – வாழைமரம், பதி.29 – 1
344. வாள் வீரம் – கூவிளமரம், வில்வ மரம். பரி. 11 – 19. வீரை என்னும் மரம்,
345. வானி – ஒருவகைப் பூ குறி.69.
346. விடத்தர் – விடத்தேரை என்னும் முள் மரம், பதி. 13 – 14.
347. விளவு – விளா மரம், அகம். 279 – 14, நற். 24 – 2
348. வெண்கோடு – வஞ்சி, காஞ்சி மரங்களின் வெள்ளிய கொம்பு
349. வெண்கூதாளம் – வெண்டாளிப் பூ. தாளி வகை மரம். White catamaran tree. முருகு. 193
350. வெண்ணெல் – மலைநெல், மது. 288.
351. வெதிர் – மூங்கில், ஐங். 280 – 2.
352. வெதிரம் – மூங்கில், ஐங்.278 – 1.
353. வெள்ளாம்பல் – புறம். 248 – 1, தழையாடையாகப் பயன்படுத்துதல், குறு. 293.
354. வெள் எள் – எள், புறம் 246 - 7
355. வெள்ளில் – விளா மரம். புறம். 181 – 1.
356. வெள்ளோத்திரம் – வெள்ளில் ஓத்திரம் என்னும் பாலைநில மரம், ஐங். 301 – 1
357. வேங்கை – வேங்கைமரம். பதி. 40 – 22.
358. வேப்பு – வேப்ப மரம். ஐங். 30 – 1.
359. வேம்பு – வேப்பமரம். பதி.49 – 15.
360. வேய் – மூங்கில், பதி. 27 – 37.
361. வேர்ப்பலவு –வேர்ப்பலா, நற்.201 – 5. செவ்வேர்ப்பலவு, குறு. 18 - 1 (செம்பருத்திச் சக்கை, செவ்வருக்கை)
362. வேரல் – சிறு மூங்கில் நற். 232 – 4.
363. வேலம் – வேலமரம். பதி.39 – 12. சிறியிலை வேல், காழ்கொள் வேல், நற். 256 - 9.
364. வேலை – குப்பை வேலை, வேளைக்கீரை, சிறுபாண். 137.
365. வேழம் – கொறுக்காந்தட்டை, மூங்கில், ஐங். 11-1 பேய்க் கருப்பந்தட்டை, கொறுக்கைச்சி, மூங்கிற்கோல், பெரும்பாண்.263, நாணல், ஐங். 20 – 3, காம்பு கண்டன்ன தூம்புடை வேழம்.
366. வேளை – வேளை வெண்பூ, வேளைக் கீரை, புறம். 215 – 3, 246 - 8
குறிப்பு 1. தாழிக் குவளை (அகம்.165) – குவளையைத் தாழி(பானை)யிலும் வளர்த்துள்ளனர்.
2. ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, குடைஅடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலை – தாழியை நிறுத்திப் பனம்பட்டையால் தண்ணீர் ஊற்றி வளர்த்த பசலைக் கொடிப் பந்தல் – வீட்டின் முன்பு தாழியைத் தொட்டியாகப் பயன்படுத்தி பசலைக் கொடி வளர்த்துள்ளனர். அகம். 275. 1-2
3. பழம்பல் நெல் – பலவகை நெல் அகம். 166.
குறிப்பு
அகம். அகநானூறு.
ஐங். – ஐங்குறுநூறு
கலி. கலித்தொகை.
குறி. குறிஞ்சிப்பாட்டு.
குறு. குறுந்தொகை
சிறுபாண். சிறுபாணாற்றுப்படை
நற். நற்றிணை
நெடு. நெடுநல்வாடை.
பட். பட்டினப்பாலை
பதி. பதிற்றுப்பத்து.
பரி. பரிபாடல்.
புறம். புறநானூறு.
பெரும்பாண். பெரும்பாணாற்றுப்படை
பொரு. பொருநராற்றுப்படை
மது. மதுரைக்காஞ்சி.
மலை. மலைபடுகடாம்
முருகு. திருமுருகாற்றுப்படை.
முல். முல்லைப் பாட்டு
தொகுப்பு : ச.ஆறுமுகம்.
பயன்படுத்திய நூல்கள் :
சங்க இலக்கிய உரைப் பதிப்புகள் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
தமிழ் பேரகராதி, Tamil Lexicon http://www.tamilvu.org/library/libindex.
தமிழ் அகர முதலி http://www.tamilvu.org/library/libindex.htm
பட்டியல் - 2
மேற்காண் பட்டியலிலிருந்து தயாரிக்கப்பட்டது.
தாவரப்பெயர்கள்.
1. அகத்திப்பூ
2. அகில். புறம் 337 - 10
3. அசோகு
4. அடும்பு. நற். 145 - 2
5. அத்திமரம் நற். 95 – 3
6. அதிமதுரம் முல்லை. 32
7. அரசமரம்.
8. அரளி, செவ்வரளி, அலரி.
9. அல்லி
10. அவரை
11. அறுகம்புல்
12. அனிச்சம்
13. ஆச்சா மரம் ( யாமரம்)
14. ஆசினி
15. ஆத்திமரம்
16. ஆம்பல்
17. ஆலமரம்
18. ஆவிரை, ஆவாரை
19. இகணை மரம்
20. இஞ்சி
21. இண்டு
22. இத்தி
23. இரவம்
24. இராசாவன்னம் (நெல்)
25. இருவாட்சி
26. இலந்தை
27. இலவ மரம்
28. இலுப்பை மரம்
29. ஈங்கை
30. ஈந்து, ஈச்ச மரம்
31. உகாய் மரம்
32. உடை மரம்
33. உந்தாழ்
34. உயவை
35. உருத்திராக்கம், அரவை, குறு. 214 - 6
36. உழிஞை
37. உள்ளி (வெங்காயம், பூண்டு)
38. உளுந்து
39. உன்னமரம்
40. ஊகம்புல்
41. எருக்கு
42. எள்
43. எறுழ் மரம்
44. ஏழில்
45. ஐயவி
46. ஐவன நெல்
47. ஒடு மரம், நிலப்பாலை
48. ஓமை மரம்
49. கஞ்சா (கஞ்சங்குல்லை)
50. கடம்பு
51. கடலை, கொண்டைக்கடலை
52. கடுக்காய்
53. கண்ணுபிள்ளைச் செடி ( பூளை)
54. கமுகு
55. கரந்தை ( திருநீற்றுப்பச்சை)
56. கருங்காலி (ebony) மதுரைக் காஞ்சி. 400 ஈட்டி மரமென்றும் தோதகத்தி மரமென்றும் செம்மரமென்றும் இது குறிப்பிடப்படுகிறது.
57. கருங்குவளை , நீல ஆம்பல்
58. கருடன் சம்பா (நெல்)
59. கருணைக் கிழங்கு நற். 367 – 3.
60. கரும்பு
61. கருந்தினை (இறடி), குறு.214 - 2
62. கருநொச்சி
63. கவலைக்கிழங்கு
64. கழற்கொடி (கழற்சி), மரக்கழச்சி
65. கழுநீர்
66. கள்ளி
67. களா
68. கறிவேப்பிலை
69. காட்டு மல்லிகை
70. காயா
71. காரை
72. காளான்
73. குப்பைக்கீரை
74. குமிழமரம்
75. குரா மரம்
76. குருக்கத்தி 1 (மாதவிக்கொடி)
77. குருக்கத்தி 2. கல்லால மரம் (White Fig)
78. குருந்த மரம்
79. குளிரிப்பூ(நீர்ச்சேம்பு)
80. குறிஞ்சி
81. குன்றிமணி
82. கூவைக்கிழங்கு
83. கொருக்கச்சி, கொருக்காந்தட்டை
84. கொள்ளு
85. கொன்றை
86. கோங்கு மரம்
87. சங்குப் பூ(நீலம்) காக்கணங்கொடி
88. சங்குப்பூ (வெள்ளை) செறுவிளை
89. சண்பகம்
90. சம்பா நெல் சாலி, செந்நெல்
91. சந்தனமரம்
92. சம்பங்கோரை
93. சாதிக்காய்
94. சிலை மரம்
95. சிவப்புப் பசலை (கீரை வகைக்கொடி)
96. சிறு மூங்கில்
97. சிறுதினை (தினைவகை)
98. சுரபுன்னை
99. சுரைக்கொடி
100. செங்கடம்பு
101. செங்கருங்காலி
102. செங்காந்தள்
103. செங்குவளை, அரக்காம்பல்
104. செந்தாமரை
105. செந்தினை, குறு. 335 – 2 (தினைவகை)
106. செம்மணிப்பூ
107. செம்மருது
108. செருந்தி (மணத்தக்காளி)
109. செவ்வரளி
110. செவ்வாழை
111. சேம்பு
112. ஞெமை மரம்
113. தகரம்
114. தடவு
115. தண்டாங் கோரை
116. தணக்கம்
117. தமாலம்
118. தருப்பை
119. தளவம்
120. தாமரை
121. தாழை
122. தாளிதம் (கொடி)
123. தாளிப்புல்
124. தில்லை
125. தினை
126. தும்பை
127. துவரை
128. துளவம், துளசி
129. தூதுவளை
130. தெறுழ்
131. தென்னை
132. தேக்கு
133. தேவதாரு
134. தேற்றா மரம்
135. தொடரி முள்
136. தோரை (மூங்கில் நெல்)
137. தோன்றி
138. நந்தியாவட்டை
139. நரந்தம் புல்
140. நறும்புல்
141. நறைக்கொடி
142. நாணல்
143. நாரத்தை மரம்
144. நாவல்
145. நீர்முள்ளி
146. நுணா (மஞ்சணத்தி)
147. நூறைக் கிழங்கு – வள்ளி வகைக்கிழங்கு (Fiji Yam)
148. நெட்டி (Sola Pith), நெட்டிக் கோரை.
149. நெருஞ்சி
150. நெல்
151. நெல்லி
152. நொச்சி
153. பகன்றை
154. பச்சிலை
155. பசலைக்கொடி
156. பஞ்சாய்க்கோரை
157. பண்ணைக்கீரை
158. பயறு
159. பயினி மரம்
160. பருத்தி
161. பலா
162. பலாசம் (புரச மரம்)
163. பவர்
164. பவளக்கால் மல்லிகை
165. பனை
166. பாகற்கொடி
167. பாசி
168. பாதிரி மரம்.
169. பாலை மரம்
170. பிச்சிப் பூ
171. பிடவம்
172. பிரண்டை
173. பிரப்பங்கொடி
174. பிரம்பு
175. பீர்க்கு
176. புலிநகக்கொன்றை
177. பூவரசு மரம்
178. பெருமூங்கில்
179. புன்கு
180. புளி
181. புன்னை
182. புன்னாகம்
183. புனமுருங்கை
184. புனலி (காட்டு மல்லி)
185. மகிழமரம்
186. மஞ்சள்
187. மஞ்சாடி மரம்
188. மருது
189. மருள்
190. மல்லிகை
191. மலைப்பச்சை
192. மலையெருக்கு
193. மலைவாழை
194. மாணைக்கொடி
195. மாதுளை
196. மாமரம்
197. மிளகுக்கொடி
198. மின்மினி நெல்
199. முசுட்டை
200. முஞ்ஞை
201. முடக்கொற்றான்
202. முருங்கை
203. முல்லை.
204. முள்முருங்கை
205. மூங்கில்
206. வாகை
207. வில்வம்
208. வஞ்சி
209. வடவனம்
210. வயலை
211. வரகு
212. வழுதுணை
213. வள்ளிக் கிழங்கு
214. வள்ளைக் கொடி
215. வளகு
216. வன்னி
217. வாகை
218. வாட் கோரைப் புல்
219. வாழை
220. விடத்தேர்
221. விளா
222. வெட்சி
223. வெட்பாலை
224. வெண்கடம்பு
225. வெண்காந்தள்
226. வெண்டாமரை
227. வெண்ணெல், (வாசறுமுண்டான் என்ற நெல் வகையினை நாஞ்சில் நாட்டு உழவர்கள் ` வெள்ளை` எனக் குறிப்பிடுவர்.)
228. வெள்ளாம்பல்
229. வெள்ளரிக்காய். புறம் 246 – 4. (கீரைக்காய்)
230. வெள்ளைப்பசலை
231. வெற்றிலை
232. வேங்கை
233. வேம்பு
234. வேர்ப்பலா
235. வேலமரம்
236. வேளை

No comments:

Post a Comment