நிலம்
குறித்த சொற்கள்
1.
அக்கரை
– எதிர்கரை, மறுகரை
2.
அகலுள்
– அகன்ற இடம். அகம். 281 - 2
3.
அகழாய்வுக்களம்
-
4.
அகழி
5.
அகழிக்கரை
6.
அகன்கண்
வைப்பு – அகன்ற இடங்களையுடைய ஊர் பதி.58 - 20
7.
அகன்கண்
செறு – அகன்ற பரப்புடைய வயல், பதி. 71 - 1
8.
அகன்தலை
நாடு – பரந்த இடமுள்ள நாடு. பதி.25.13, 62 -19
9.
அங்கணம்
10. அங்கணக்குழி
11. அங்காடி
12. அசும்பு – சேறும் நீரும் அறாத குழி, அகம்,
8 -9, 376 - 13
13. அட்டைக்காடு -
14. அடுக்கம் – பக்கமலை நற். 7-2, 28 – 6.
15. அடுக்கம் – மலைச்சாரல், அகம்.92 – 4.
388 - 4
16. அடுக்கல் – மலைப்பக்கம் நற்.22-1
17. அடுக்களை
18. அடுகளம் – போர்க்களம், புறம்.26 - 11
19. அடுப்பங்கரை
20. அடும்பு அமல் அடைகரை – அடுப்பங்கொடி படர்ந்த
அடைகரை,பதி.51- 7
21. அடைகரை – அகன்ற கரைப்பகுதி. நற். 11 –
6,27 – 3. அகம், 30 -7
22. அண்டக்கல் – சுண்ணம் தயாரிக்கப்பயன்படுவது.
அகத்தியம்.
23. அணிநிலம் - அழகின்சிரிப்பு
24. அணை
25. அணைக்கட்டு
26. அணகரை – அழகின் சிரிப்பு
27. அணைக்கரை
28. அத்தம் – பாலை நிலம், அகம். 3 -11
29. அத்தம். – பாலைநில வழி – நற்.6 -7. 37 –
3
30. அத்துவானக்காடு
31. அதர் – வழி நற். 29 -5, 33-7.
32. அந்தப்புரம்
33. அம்பலம் – பொதுவிலான தங்குமிடம்
34. அம்புடை வாயில் – பதி.53
35. அயம் – குளம், அகம். 62 – 1
36. அயம் – நீரோடை, அகம் .234-2
37. அயம் – சுனை, அகம், 262 – 14.
38. அரங்கம் -
39. அரண்
40. அரணம்
41. அரண்மனை
42. அரம்பு – பாலைநிலம் அகம், 287 – 13.
43. அரமியம் – நிலாமுற்றம் அகம்.124 – 15.
44. அர வழங்கும் பெருமலை – பாம்புகள் நடமாடும்
மலை. பதி.51 – 12,13
45. அருப்பம் – அரண். பதி.45 – 9.
46. அருவி
47. அருவிக்கரை
48. அல்குறு கானல் – மக்கள் தங்குதற்குரிய கானல்,
பதி.30 5
49. அல்லங்காடி
50. அலைவாய்
51. அலைவாய்க்கரை
52. அவல் – விளைநிலம் புறம் 6 – 14
53. அவல் – பள்ளம் புறம்.102 – 3, 187 -2,
352 – 3.
54. அவிர் நிணப்பரப்பு – பதி. 67 - 8
55. அழுவம் – கடற்கரை, அகம்.20 – 1
56. அழுவம் – காடு, அகம். 79-9
57. அழுவம் – படைப்பரப்பு அகம். 81 – 12.
58. அழுவம் – போர்க்களம், அகம், 111-13. பதி.
45 - 12
59. அழுவம் – நிலப்பரப்பு, பதி.31 - 30
60. அளர் பூமி –
61. அளை – குகை, மலைப்பிளவு .நற்.98-7 முதலியன.
62. அளை – தரிசுநில வெடிப்பு, பதி.28 - 7
63. அளை – புற்று நற்.264 – 1
64. அளை – வளை. நற்.385 – 3
65. அறாஅ யாணர்ச் செறு – விளைவு அறாத வயல், பதி.71
– 1 9 நீங்காத புது வருவாயுடைய வயல்
66. அறை – பாறை . நற்.79-3
67. அறை – மலைப்பக்கம் அகம் 105 – 1, 107 –
4.
68. அறை – பிளவு, அகம். 107 – 16, 301 – 7
69. அறை – கொட்டில், அகம். 253 – 16
70. ஆச்சிரமம்
71. ஆச்சிரம நிலம்.
72. ஆடுகளம் – கூத்தர் ஆடும் களம். புறம்.
28.- 14.
73. ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை – மேகத்தைத்
தடுக்கின்ற பயன்கள் நிரம்பிய மலையுச்சி, புறம். 157
74. ஆயிரங்கால் மண்டபம் - மலரும் மாலையும், பக்.
170
75. ஆரெயில் –கடி மிளை, குண்டு கிடங்கு, நெடுமதில்
உடைய அரண். பதி.62-4
76. ஆலமரத்து நிழல் - மலரும் மாலையும், பக்.
170
77. ஆழ்கயம் - மலரும் மாலையும், பக்.132
78. ஆழங்கால் –
79. ஆழி
80. ஆற்றங்கரை –
81. ஆற்றிருங்கரை – பதி.43 -15
82. ஆற்றின்குறை
83. ஆற்றுநிலம்
84. ஆற்றுப்பாதை - அழகின்சிரிப்பு
85. ஆற்றுப்பாய்ச்சல் -
86. ஆறு – வழி. அகம், 15 – 9, 32 – 17.
87. இஞ்சி – மதில், புறம்.350 - 2
88. இடுகாடு
89. இடுமுடுக்கு
90. இடைநாடு
91. இடையர் பூமி
92. இடைப்புலம் – இடைப்பட்ட பகுதி புறம்.30-14.
93. இயவு – வழி, அகம்.9-8, 84 – 9
94. இருக்கை – ஊர், பதி.75 - 7
95. இருங்கரை – வலிமை மிக்க கரை பதி.43 – 15
96. இருஞ்சேறு, இருஞ்சேறு ஆடிய மணல்மலி முற்றம்
– பதி.64.6
97. இருந்த இடம். - மலரும் மாலையும், பக்.
134.
98. இருநிலம் – பெரியநிலம், பதி. 34-3.
99. இலஞ்சி. – பொய்கை. நற்.160 – 8. அகம்.186-
3,
100.
இறக்கம்
-
101.
இறை
– வீட்டின் இறப்பு, அகம்.167-20.
102.
இறை
– வீட்டின் பின்பகுதி. நற். 71 – 7
103.
இறை
– சந்து. நற். 121 – 12, 181 – 1
104.
ஈச்சங்காடு
105.
உடைமரக்காடு
106.
உடைப்பு
-
107.
உம்பல்
– யானைகள் வாழும் பெருங்காடு. அகம். 357 – 9.
108.
உயிர்ப்பூங்கா
109.
உலைக்களம்
110.
உவர்
– களர்நிலம் , நற்.84 – 8, 138 – 1.
111.
உழை
– இடம். அகம். 379 - 20
112.
உள்
– உள்ளிடம், அகத்திடம், அகம். 42 – 8
113.
உள்வழி
– பதி.45 –
114.
உளை
- சேற்றுநிலம்
115.
உறைவிடம்
- மலரும் மாலையும், பக். 134
116.
ஊதை
உஞற்றும் பொழில் – பதி. 51 - 8
117.
ஊர்
–
118.
ஊர்ப்பக்கம்
119.
ஊர்ப்புறம்
120.
ஊரடி
நிலம் -
121.
ஊருணி
122.
ஊருணிக்கரை
123.
ஊற்று
124.
எக்கர்
– மணல்மேடு. நற்.15 – 1
125.
எந்திரத்
தகைப்பின் புரிசை – போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட மதில். பதி.53
126.
எதிர்கரை
127.
எதுவாய்
– ஏரி மறுகால், ஏரிக் கோடி
128.
எரிமேடை
-
129.
எல்லை
–
130.
ஏணிப்புலம்
– பாசறை பதி,54 - 12
131.
ஏந்தல்
132.
ஏரி
–
133.
ஏரி
எதுவாய் -
134.
ஏரி
உள்வாய்
135.
ஏரிக்கரை
136.
ஏரிக்கோடி
137.
ஏற்றம்
138.
ஏனல்
– தினைப்புனம். நற்.13 – 3, 102 – 9. பதி.30 – 22.
139.
ஐயவி
– துலாமரம் – பதி.16-4
140.
ஐவனம்
141.
ஒளிறுவன
இழிதரும் உயர்ந்துதோன்று அருவி - அகம்.162.
142.
ஒற்றையடிப்பாதை
143.
ஓங்கல்
– மலை, அகம், 228-10.
144.
ஓங்குமலை
அடுக்கம் – நற்.28
145.
ஓடை
- மலரும் மாலையும், பக்.132
146.
ஓடைக்கரை
147.
ஓவு
உறழ் நெடுஞ்சுவர் – பதி.68 - 17
148.
கட்சி
– காடு, அகம். 392 -17.
149.
கட்சி
– தங்குமிடம். நற். 276 – 6..
150.
கட்டூர்
– பாசறை அகம், 44 – 10. 212 – 14
151.
கடம்
– காடு அகம்.29 – 19, பதி. 66 – 16.
152.
கடம்
– பாலைநிலம். நற்.48-5, 186 – 4.
153.
கடல்
154.
கடல்சேர்
கானல் – பதி.51 - 3
155.
கடல்புரம்
156.
கடலங்கானல்
– குறு.245 - 1
157.
கடற்கரை
158.
கடற்கரைச்சாலை
159.
கடற்கரைச்
சோலை -
160.
கடற்கால்
161.
கடற்படப்பை
– கடற்பக்கம், பதி.30.-8
162.
கடறு
– பாலைநிலம் அகம் 75 – 4
163.
கடறு
– மலைச்சாரல், அகம்.225 – 9
164.
கடறு
– காடு, அகம். 399-6
165.
கடிமிளை
– காவற்காடு, புறம்.21-5.
166.
கடிகா
– காவலுடைய சோலை, புறம். 239 = 2
167.
கடிமுனை
– போர்க்களம், பதி.39.-4
168.
கடைத்தெரு
169.
கடைவீதி.
170.
கண்மாய்
171.
கண்மாய்க்கரை
172.
கதுவாய்
– சிதைந்த இடம், கதுவாய் மூதூர், புறம். 350 - 2
173.
கந்தகபூமி
174.
கமலை,
கமலைக்கிணறு -
175.
கயம்
– குளம், அகம். 11-6, 56 – 2.
176.
கரம்பை
– தரிசுநிலம் புறம்.285 – 7, 302 -7
177.
கரிசல்
178.
கரும்புநடு
பாத்தி – குறுந்.262
179.
கரைவலம்
– முகட்டினிடம். நற். 81 – 6.
180.
கரும்பு
அமல் கழனி –கரும்பு நெருங்கி வளர்ந்த வயல்,பதி.50 - 3
181.
கல்பிறங்கு
வைப்பு – பதி.53 - 4
182.
கல்மடம்
–
183.
கல்லளை
184.
கல்லாங்குத்து
–
185.
கல்லுடை
நெடு நெறி – பதி. 19 - 2
186.
கல்லுயர்
கடம் – கற்கள் உயர்ந்த காடு, பதி.21 - 22
187.
கவலை
– கவர்த்த வழி, கிளைவழி. அகம்.53-12, 72 – 16.
188.
கவலை
– பலவழிகள் – நற்.79 – 4. 351 – 9.
189.
கவலை
– அரிய வழி. நற். 82 – 6, 144 – 6.
190.
கவாஅன்
– மலைப்பக்கம். நற்.32 -4,43-2, அகம். 5 -11
191.
கவாஅன்
– பக்கமலை, அகம். 72 -11.
192.
கவாஅன்
– மலைச்சாரல் , அகம்.162
193.
கழனி
– வயல், புறம். 24- 19.
194.
கழி
– கடலையடுத்த உப்புநீர்ப்பரப்பு நற்.27 – 9., 31 – 3.
195.
கழி
– உப்பங்கழி , நற்.4 – 12, 27-4.
196.
கழைதிரங்கு
அத்தம் – மூங்கில் வாடிய வழி பதி.41 – 14
197.
கழைவிரிந்து
எழுதரு மழைதவழ் நெடுங்கோடு – பதி.78
198.
கள்ளிக்காடு
199.
களஞ்சியம்
200.
களம்
– நெல் முதலிய தானியங்கள் அறுத்தடிக்கும் களம்.
201.
களர்
– உவர்நிலம் புறம்.193 -1, 311 -1, 362 – 16
202.
களரி
– களர்நிலம் புறம்.225 -7, 237 – 13, 245 – 3, 359 – 6, 360 – 16
203.
களரி
– உப்புப் பூத்த பாழ்நிலம். நற்.84 – 8, 126 – 2.
204.
களரி
– காடு புறம்.356 – 1
205.
களி,
களிக்கால் - களிமண்நிலம்
206.
கா
– தோட்டம் நற்.315 – 5
207.
காட்டு
வழி
208.
காட்டுவெளி
209.
காடு
– பதி.41 – 13
210.
காணிநிலம்
-
211.
காப்பகம்
212.
காப்பித்தோட்டம்
213.
காப்புக்காடு
– பாதுகாக்கப்பட்ட காடு
214.
காவற்காடு
– அரணாக அமைந்த காடு
215.
காவுயர்
சோலை – மலரும் மாலையும். பக்.105.
216.
காயல்
-
217.
கால்
– வாய்க்கால்
218.
கால்
திரையெடுத்த முழங்குகுரல் வேலி – கடல் எல்லை. பதி. 63
219.
கால்வாய்
220.
கால்வாய்க்கரை
221.
கால்
உறு கடல் – பதி.69 – 4.
222.
காவிரி
மண்டிய சேய்விரி வனப்பின் புகார் – பதி.73 – 11- 12
223.
கான்
உணங்கு கடுநெறி – காடு தீய்ந்த வழி, பதி.25.8.
224.
கானல்
– கடற்கரை, புறம். 17 – 11, 24 – 10, 60 – 6, அகம். 40 -1
225.
கானல்
– மலைப்பக்கம், புறம். 374 – 1
226.
கானல்
– கடற்கரைச் சோலை, நற்.4 – 1, 18 – 4, அகம்.30-14
227.
கானலம்
பெருந்துறை – பதி.55 - 5
228.
கானவழி
229.
கானற்பெருவழி
230.
கானாறு
-
231.
கிடக்கை
– நிலம், அகம்.379-6.
232.
கிடக்கை
– இடம், அகம்.365 – 7.
233.
கிடங்கு
– குண்டு கிடங்கு – அகழி. பதி. 20 – 17, புறம்.350 -1.
234.
கிடப்பு
235.
கிடை
236.
கிணறு
237.
கிணற்றடி
238.
கிணற்றங்கரை
239.
கிராமம்
–
240.
கிராமத்து
நிலம்
241.
குக்கிராமம்
–
242.
குச்சில்
- குச்சுவீடு
243.
குட்டம்
– ஆழமான பள்ளம். நற்.144 – 8.
244.
குட்டம்
– ஆழம், அகம். 162 – 1
245.
குட்டம்
– ஆழப்பரப்புள்ள இடம் (கடல்) அகம்.280 – 9.
246.
குடகடல்
பதி.51 - 15
247.
குடபுலம்
248.
குடா
249.
குடிசை
-
250.
குடில்
251.
குடியிருப்பு
–
252.
குடியிருப்பு
மனை
253.
குண்டு
254.
குண்டு
அகழி புறம் – 18 -10
255.
குண்டு
கண் – ஆழமான இடம், பதி.45 – 7
256.
குண்டு
கண்ணகழிய குறுந்தாள் ஞாயில் பதி.71 - 12
257.
குணகடல்
– பதி.51 – 15.
258.
குப்பைக்குழி
259.
குப்பைமேடு
260.
குருமடங்கள்
- மலரும் மாலையும், பக்.116
261.
குருதிமன்றம்
– பதி.35 – 8.
262.
குழி
-
263.
குழிப்பள்ளம்
-
264.
குளம்
265.
குளத்தங்கரை
266.
குளத்துமேடு
267.
குறடு
268.
குறிஞ்சி
269.
குறும்பல்,
(குறும்பல் யாணர் குரவை) – ஒரு குரவையாடும் இடத்திற்கு மற்றொரு குரவையாடும் இடம் அண்மையதாய்ப்
பலவாயுள்ள இடங்கள். பதி.73 – 11
270.
குறும்பல்லூர்
(குறும்பல்லூர் நெடுஞ்சோணாடு) – ஒன்றற்கு ஒன்று அண்ணிதாகிப் பலவாகிய ஊர்களையுடைய சோழநாடு.
பட்டினப். 28. நச்சர் உரை
271.
குறும்பொறை
– சிறிய குன்று, பதி. 74 - 7
272.
குறுந்தாள்
ஞாயில் – குறுகிய படிகளையுடைய முடக்கறை 9 மதில் மீது அம்புகள் வைக்கும் அறை, இந்த அறை
ஏப்புழை என்றும் சுட்டப்படுகிறது. பதி. 71 - 12
273.
குறும்பு
– அரண். நற்.77-3
274.
குறும்பொறை
– சிறிய மலை, அகம். 14 – 8, 159 – 14.
275.
குன்று,
குன்றம்
276.
குன்று
தலைமணந்த புன்புல வைப்பு – குன்றுகள் கலந்த புல்லிய பாலை நிலம், பதி. 30 – 13.
277.
கூடாரம்
– மலரும் மாலையும், பக். 112
278.
கூத்துக்களம்
279.
கூவல்
- கிணறு, நற் 41-4
280.
கூவல்
– பள்ளம். 240 – 7.
281.
கூற்றம்
– மிழலைக்கூற்றம், முத்தூற்றுக்கூற்றம் புறம்.23.
282.
கேணி
-
283.
கொட்டகை
– மலரும் மாலையும் பக்.112.
284.
கொட்டா,
கொட்டாய்.
285.
கொட்டாரம்
286.
கொட்டில்
–
287.
கொடி
நுடங்கு தெரு – கொடிகள் அசைகின்ற தெரு – பதி. 47 - 4
288.
கொடிவழி
-
289.
கொடுமுடி
290.
கொல்லை
291.
கொல்லைக்கொட்டாய்
292.
கொள்ளுடைக்
கரம்பை – கொள் பயிராகியிருக்கும் வலிய காட்டு நிலம், பதி. 75, - 11
293.
கோட்டம்
– குணவாயிற் கோட்டம், சக்கரவாளக் கோட்டம்.
294.
கோட்டை
295.
கோட்டை
கொத்தளம்
296.
கோட்டையகம்
297.
கோட்டைவாசல்
298.
கோடு
– மலை. பதி.16 - 1
299.
கோடு
நரல் பௌவம் – சங்கு ஒலிக்கும் கடல் பதி.46 - 11
300.
கோடைப்பதி
-
301.
கோணம்
– வயல் மற்றும் மற்றும் வயல்களோடு சேர்ந்த களம், வீடு, தொழுவம் அனைத்தும்.
302.
கோபுரவாசல்
303.
கோபுரவீதி
304.
ஞெள்ளல்
– வீதி அகம். 326 -4.
305.
சதுக்கம்
– நாற்சந்தி. நற். 319 – 5.
306.
சதுப்புநிலம்
307.
சதுரநிலம்
308.
சந்தனக்காடு
309.
சந்து
–
310.
சந்தை
311.
சமவெளி
312.
சவுக்கை
–
313.
சவுட்டு
மண் அகத்தியம்.
314.
சாயாவனம்
315.
சார்விடம்
மலரும் மாலையும், பக்.134 சார்விடமெங்கும் படர்ந்து
316.
சால்மரக்காடு
317.
சாலை
–
318.
சிதைந்த
இஞ்சி – பழுதுபட்டுத் தோன்றும் மதில்.
319.
சிமயப்பாங்கர்
– மலையுச்சியின் பக்கம், அகம்.94 – 1.
320.
சிமை
– உச்சி, அகம். 138 – 8, 143 – 13
321.
சிமையம்
– மலையுச்சி, அகம். 119-20
322.
சிலம்பு
– மலை. புறம். 143 – 10.
323.
சிலம்பு
– மலைப்பக்கம், பெரும்பாண். 330
324.
சிலம்பு
– குகை, பரி. 15, 44.
325.
சிறை
– அணை, அகம். 76 -11
326.
சிறை
– இடம், அகம். 92 -10
327.
சிறை
– சிறைக்கோட்டம், அகம். 122 – 5.
328.
சுக்காம்பார்
–
329.
சுடுகாடு
–
330.
சுடுமண்
331.
சுண்ணாம்புக்கல்
332.
சுண்ணாம்புப்பார்
–
333.
சுரங்கம்
334.
சுரங்கப்பாதை
335.
சுரங்க
வழி
336.
சுரபுன்னைக்காடு
337.
சுரம்
– பாலை, 1 – 15, 7 -13
338.
சுரம்
– அரிய வழி, அகம். 8-17
339.
சுரம்
– வழி, அகம். 17-17
340.
சுருங்கை
-
341.
சுவல்
– மேட்டுநிலம் புறம் 120 – 1, நற். 202 -3
342.
சுற்றுலாத்தலம்
343.
செக்கடி
நிலம்
344.
செக்கு
மேடு
345.
செங்களம்
குருதியால் சிவந்த களம். பதி.நான்காம்பத்து பதிகம் 11
346.
செந்நெற்புலம்
347.
செம்பால்
முரம்பு – பதி.66 – 17.
348.
செம்புலம்
349.
செம்மண்பூமி
350.
செறு
– வயல், அகம்.13-20, 140-2
351.
செறு
– பாத்தி, அகம். 207 – 1
352.
சேடை
-
353.
சேண்புலம்
– தொலைவிடம். அகம். 390 – 2. பதி. 61 10
354.
சேய்விரி
வனப்பின் புகார் – நெடுந்தூரம் விரிகின்ற வனப்புடைய புகார், பதி. 73 - 12
355.
சேரி
– தெரு. அகம்.15 – 7, 76 – 2.
356.
சேறு
– பதி.65 – 16
357.
சோர்ந்த
ஞாயில் – இடிந்த மதிலக ஞாயில், புறம். 350 - 1
358.
சோலை
359.
ஞாட்பு,
நாட்பு – போர்க்களம். பதி.45 – 5
360.
ஞாயில்
– மதில்மீது அம்புகள் வைக்கப்பட்டிருக்கும் முடக்கறை, பதி.71 – 12. மறைந்திருந்து அம்புகளை
எய்வதற்கு மதிலில் உள்ள ஓர் இடம், புறம். 350 - 1
361.
ஞாழல்
கரை – ஞாழல் மரமுள்ள நீர்க்ரை பதி.30 - 1
362.
தகர்
– மேட்டு நிலம்
363.
தங்கிடம்
- மலரும் மாலையும், பக். 175
364.
தண்கடற்படப்பை
– பதி. 55 - 6
365.
தண்டலை
– பூம்பொழில், அகம் 204-13
366.
தண்ணடை
– மருதநிலம், அகம், 84 – 14.
367.
தரிசு
368.
தருப்பைக்காடு
369.
தாங்கல்
370.
தாமரைப்
பொய்கை – மலரும் மாலையும் பக். 104
371.
தாழைக்கானல்
– 55 - 5
372.
திட்டிவாசல்
373.
திட்டு
374.
திண்ணை
- மலரும் மாலையும், பக்.167
375.
திரடு
–
376.
திரட்டடி
நிலம்
377.
தீபகற்பம்
378.
தீர்வை
ஏற்படாத தரிசு
379.
தீர்வை
ஏற்பட்ட தரிசு
380.
தீவாந்தரம்
- மலரும் மாலையும், பக்.155
381.
தீவு
382.
துச்சில்
– பள்ளியறை, அகம்.203 – 16.
383.
துச்சில்
– குடியிருப்பு, அகம்.321-11
384.
துஞ்சு
பதி – வசிக்கும் ஊர், பதி.31 - 10
385.
துருத்தி
– தீவு – பதி.20 - 2
386.
துளங்குநீர்
வியலகம் – கடல் பதி.51 - 1
387.
துறை
– புறம். 23 -2
388.
துறைமுகம்
389.
தூர்ந்த
கிடங்கு – மண்மூடித் தூர்ந்த அகழி, புறம். 350 - 1
390.
தெண்கடல்
– தெள்ளிய கடல் பதி.67 – 4.
391.
தெப்பக்குளம்
392.
தெம்முனை
– போர்க்களம், அகம்.187 – 6,251 – 10.
393.
தெரு
394.
தெருமுனை
395.
தெவக்கம்
396.
தெற்றி
– மேடை, அகம்.259 -13.
397.
தென்கரை
398.
தென்புலம்
399.
தேஎம்
– நாடு பதி.20 – 7, 9.
400.
தேக்கம்
–
401.
தேயம்
– பாலைப்பரப்பு, அகம். 383 – 4.
402.
தேயிலைத்தோட்டம்.
403.
தேரி
404.
தொல்நகர்
வரைப்பு – பழைய நகர் எல்லை, பதி. 47 - 8
405.
தொழிலகம்
406.
தொழுவம்
407.
தொள்ளை
– குழி, அகம்.149 – 3.
408.
தொளி
-
409.
தோப்பு
–
410.
தோப்படி
நிலம் -
411.
நகர்
– மாளிகை, நற். 98 -8
412.
நகர்
– வீடு. நற்.132 – 5.
413.
நகர்
– அரண்மனை, பதி. 68 - 16
414.
நகர்ப்புறம்
415.
நஞ்சை
416.
நஞ்சைத்தரிசு.
417.
நடைபாதை
418.
நடைமேடை
419.
நத்தம்
–
420.
நதி
421.
நதிக்கரை
422.
நந்தவனம்
423.
நல்ல
நிலம்
424.
நளியிரு
முந்நீர் ஏணியாக வளியிடை வழங்கா வானம் சூடிய மண்திணி கிடக்கை புறம். 35
425.
நன்கலவெறுக்கை
துஞ்சும் பந்தர் – ஆபரணங்கள், பொருட்கள் பாதுகாக்கப்படும் பண்டசாலைகள் – பதி.55 -
4
426.
நன்னிலம்
427.
நனந்தலை
– அகன்ற இடம் அகம் 3 – 3, 19 – 3
428.
நனந்தலை
– அகன்ற இடத்தைநுடைய காடு, பதி.74. 27
429.
நாஞ்சில்
ஆடிய கொழுவழி – கலப்பை உழுத சால் பதி. 58 - 17
430.
நாடு
– பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் வாடை தூக்கும் நாடு, பதி.61 – 1,2
431.
நாண்மகிழ்
இருக்கை – அவை. புறம். 29 – 5.
432.
நாளங்காடி
433.
நாளோலக்கம்.
434.
நாற்கால்
பந்தர் – புறம்.29 – 19
435.
நானிலம்
– குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் – பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, மு.வ. பக.275,
மலரும் மாலையும், பக். 113
436.
நியமம்
– கடைத்தெரு அகம். 83 – 7, 90 – 12.
437.
நிலவுக்கடல்
வரைப்பின் மண்ணகம் புறம் 3
438.
நினைவுக்கூடம்
-
439.
நீர்க்கரை
-
440.
நீர்ப்பிடிப்பு
-
441.
நீரடி
நிலம்
442.
நீரழி
பாக்கம் –
443.
நீர்
வாவி
444.
நீராடுதுறை
445.
நீராழி
446.
நீரோடை
447.
நீள்நகர்
– நீண்ட அரண்மனை, பதி.68 – 17 நீள் நகர் வரைப்பு
448.
நெடி
இடை – நீண்ட இடம் அகம். 254 – 7
449.
நெடிய
வழி
450.
நெடுங்குன்று
– ஐங்.209
451.
நெடுங்கோடு,
கழைவிரிந்து எழுதரு மழைதவழ் நெடுங்கோடு – மூங்கில் விரிந்து எழுவதும் மேகங்கள் தவழ்வதுமாகிய
உயர்ந்த சிகரம், பதி. 73 – 14
452.
நெடுநிலை
வாயில் – நெடிய வீட்டின் முன்வாயில், முற்றம். புறம். 350 - 6
453.
நெடுநீர
துறை – ஆழமுடைய குளங்கள், பதி. 33 - 4
454.
நெடுநெறி
– பதி.19 -2
455.
நெடுமண்
இஞ்சி – பதி. 68 – 16.
456.
நெடுவரை
457.
நெடுவரைக்கல்
– பதி. 67-21
458.
நெய்தல்
459.
நெய்தற்
பாசடைப் பனிக்கழி -– நெய்தலின் பசிய இலையும் குளிர்ச்சியுமுடைய கழி, பதி.30 -
2
460.
நெல்விளைகழனி
– புறம் 29. -13.
461.
நெறி
–
462.
நேர்கொள்
நெடுவரை – நேராக உயர்ந்த பெருமலை, அகம்.162
463.
பங்குநிலம்
464.
பட்டணம்
465.
பட்டிக்காடு
466.
படப்பை
– விளைநிலம் – புறம் 6-14.
467.
படப்பை
– அகன்ற இடம். புறம். 9 – 20
468.
படப்பை
– பக்கம் புறம்.12 – 23, 137 – 2, 140 – 3.
469.
படப்பை
– பக்கமலை, புறம்.166 – 29, 202 – 4.
470.
படப்பை
– தோட்டம், புறம்.197 – 10, 375 – 10, 385 – 8.
471.
படப்பை
– நெய்தல் நிலம் . நற்.67-32
472.
படப்பை
– கொல்லை . நற். 38 – 7.
473.
படர்ந்த
இடம் - மலரும் மாலையும், பக்.134
474.
படி
– நிலம் அகம்.119 – 18
475.
பட்டி
476.
படிப்பகம்
477.
படிப்புரை
478.
படுதிரை
வையம் – தொல். பொருள்.2
479.
படைவழி
– பதி.51 – 30
480.
பணை
– வயல், பணைநல் ஊர், புறம்.351 - 12
481.
பதணம்
– மதிலுள் மேடை பதி.22-25.
482.
பதப்பர்
– வைக்கோற் புரிகொண்டு வெள்ளத்தைத் தடுக்கும் மணல் அணை, மணல் கோட்டை, பதி. 30. -
21
483.
பதி
– கோயில், நிலம், ஊர்
484.
பணை
– மருதநிலம். அகம்.91 – 14.
485.
பத்து
- வயல்பத்து
486.
பத்துக்காடு
487.
பந்தடி
மைதானம்
488.
பந்தர்
– கூரை வேயப்பட்ட இடம் புறம். 29-19, 250-3, 260-28, 262-2
489.
பயங்கெழு
மீமிசை – பயன்கள் நிரம்பிய மலை புறம்.157
490.
பல்பூங்கானல்
– நற்.335
491.
பல்பூஞ்செம்மற்காடு
– பல்பூக்கள் வாடிக்கிடக்கும் காடு, பதி.30 –26.
492.
பல்வைப்பு
– பல ஊர்கள். பதி.30 21.
493.
பழத்தோட்டம்
494.
பழனம்
– வயல் புறம். 13-10
495.
பழனம்
– பொய்கை புறம்.61-4, 249 – 3, 334 – 1.
496.
பள்ளம்
-
497.
பள்ளவயல்
–
498.
பள்ளி
499.
பள்ளிக்கூடம்
500.
பறம்பு
– ஒரு மலை. புறம்.108-4,109-4,110-2,3, 113-7.
501.
பறந்தலை
– போர்க்களம். புறம்.19-16,25-6,35-23,66-6.
502.
பறந்தலை
– பாழிடம். புறம்.23-20,234-13
503.
பறந்தலை
– பாசறை, 64 – 3.
504.
பறந்தலை
– சுடுகாடு புறம்.225-7
505.
பறந்தலை
– பாழிடம் அகம் 29 -15, ப
506.
பறந்தலை
– போர்க்களம் அகம். 45 – 9, 55 – 10.
507.
பறந்தலை
– போர்க்களத்தின் உட்களம். பதி. 35 – 6.
508.
பனந்தோப்பு
–
509.
பனிக்கடல்
– 41 – 27
510.
பனிச்சுரம்
– பதி.59 - 3
511.
பனித்துறை
– குளிருகின்ற நீர்த்துறை, பதி.31 - 6
512.
பனிப்பௌவம்
– பதி.51 -14.
513.
பனைக்கரை
–
514.
பனை
தடி புனம் – பனைமரங்கள் வெட்டப்பட்டுக் கிடக்கும் காடு. பதி. 36 – 5.
515.
பாக
நிலம்
516.
பாசறை
– புறம். 22 - 5
517.
பாசன
நிலம்
518.
பாட்டை
–
519.
பாடல்
சான்ற வைப்பு – பாடல்பெற்ற ஊர், பதி.75 – 14
520.
பாடல்
சான்ற வைப்பின் நாடு – பாடல்பெற்ற ஊர்களை உடைய நாடு, பதி.75 – 14,15
521.
பாடி
–
522.
பாத்தி
-
523.
பாதை
-
524.
பாய்ச்சல்
நிலம்
525.
பார்
– வலிய நிலம். புறம்.14-5, 265
526.
பார்
– பாறை நிலம், நற்.24 – 1.
527.
பால்
– நிலம். புறம்.384 -1, 4
528.
பாலைநிலம்
529.
பாலைவனம்
530.
பாழ்மனை
– பாழாகிப் போன வீட்டு மனை, பதி.26 - 10
531.
பாழ்,
பெரும் பாழ் – பாழ்நிலம், பதி.22 - 38
532.
பாழிடம்
–
533.
பாளையம்
534.
பாறை
535.
பிணம்
பயில் அழுவம் – பதி. 66 - 6
536.
பிணம்
பிறங்கு அழுவம் – பிணம் மண்டிய போர்க்களம். பதி. 45-12
537.
பிலம்
538.
பிறங்கல்
– மலை. அகம். 7 – 15, 8 – 13, 152 - 22
539.
பின்வாசல்
540.
புஞ்சை
541.
புஞ்சைத்
தரிசு
542.
புணரி
இரங்கும் பௌவம் – பதி.55 - 3
543.
புதுவனம்
- மலரும் மாலையும், பக். 132
544.
புதைகுழி
-
545.
புரவு
– விளைநிலம். புறம்.260 – 9
546.
புரவு
– இறையிலி நிலம். புறம் 297 – 5, 330 – 6.
547.
புரிசை
– பதி.53 - 9
548.
புல்வளர்
கானம் – மலரும் மாலையும். பக். 105
549.
புல்லதர்ச்
சிறுநெறி – பரலும் முள்ளும் பயின்ற சிறுவழி நற்.29– 5.
550.
புல்லுடை
வியன்புலம் – புல்வெளி, பதி.21 – 21, 62 - 13
551.
புலம்
– இடம் புறம்.16-9, 18 – 24
552.
புலம்
– நாடு. புறம். 22-37,31-11,12, 150-3
553.
புலம்
– நிலம், புறம்.34-9,42-17,105-5,135-6.
554.
புலம்
– மேய்ச்சல் நிலம், புறம்.339-1
555.
புலவுக்கடல்
உடுத்த வானம் சூடிய மலர்தலை உலகம் பெரும். 409, 410
556.
புலன்
– நிலம்.புறம்.23-7
557.
புலன்
– இடம். புறம்.395 – 16.
558.
புலாஅம்
பாசறை பதி.61 -
559.
புவனம்
560.
புவி
561.
புழை
562.
புறம்போக்கு
–
563.
புறவணி
வைப்பு – காடு சூழ்ந்த ஊர், பதி.30 - 25
564.
புறவாய்
– புறத்தே நீர் செல்லுதற்குரிய போக்கு மடை, புறம். 352
565.
புறவு
– முல்லைநிலம். புறம். 328-1, 386 – 12.
566.
புறவு
– காடாகிய முல்லை, நிலம், நற் 21 – 9, 48-5.
567.
புன்செய்
568.
புன்புலம்
– புறம் 18 – 24. சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் பதி.58 – 14,15
569.
புன்புலம்
– புல்லிய பாலை நிலம், பதி. 30 - 13
570.
புனம்
– தினைக்கொல்லை அகம். 38 – 14.
571.
புனல்பொரு
கிடங்கு – பதி.62 – 10
572.
பூங்கா
573.
பூஞ்சோலை
574.
பூந்தோட்டம்
575.
பெருங்கல்
– மலை, புறம். 17-1, 137-13,202-21. நற்.93 – 5
576.
பெருவழி
– புறம் 30 – 14.
577.
பேரங்காடி
578.
பேரேரி
579.
பேராறு
580.
பேரியாறு
581.
பொங்கர்
– சோலை அகம். 4 – 10.
582.
பொத்தை
-
583.
பொதியில்
– ஊர் அம்பலம் அகம் 167 – 20.
584.
பொதினி
– பழனிமலை. அகம். 1 – 4, 61 – 16.
585.
பொதும்பு
– சோலை அகம். 18 – 15
586.
பொதும்பு
– பொந்து அகம். 256 - 1
587.
பொய்கை
– நீர்நிலை. அகம் 96 – 3..
588.
பொழில்
– சோலை. அகம். 360 – 19.
589.
பொற்றை
-
590.
பொறை
– மலை அகம். 4 – 13
591.
பொறை
– காடு அகம்.14 - 8
592.
பொன்விளையும்
பூமி
593.
போந்தைப்
பொழில் – பதி.51 - 9
594.
போர்க்களம்
595.
மடம்
596.
மடத்துநிலம்,
மடத்தான் நிலம்
597.
மடு
–
598.
மடை
599.
மடைமாறு
– மடைமாறுமிடம்.
600.
மணல்தேரி
601.
மணல்
பூமி
602.
மணல்மலி
முற்றம் – பதி.64.6
603.
மதகடி
604.
மந்தைவெளி
–
605.
மண்கெழு
ஞாலம் – பதி.69
606.
மண்டி
607.
மண்ணகம்
608.
மண்புனை
இஞ்சி மதில் – மண்ணால் கட்டப்பட்ட மதில் பதி.58-6
609.
மணல்பூமி
–
610.
மணல்தேரி
611.
மணற்கோடு
– மணற்குன்று, பதி.30-27
612.
மணிநெடுங்குன்று
– ஐங். 209
613.
மந்தை
614.
மரச்சோலை
615.
மருதம்
பதி.73.7
616.
மருதம்
சான்ற மலர்தலை விளைவயல், பதி. 73 - 7
617.
மலங்காடு
618.
மலர்தலை
விளைவயல் – பரந்த இடத்தையுடைய வயல்
619.
மலை
620.
மலைச்சரிவு
621.
மலைச்சாரல்
622.
மலைநாடு
623.
மலைப்புலம்
624.
மலைப்புறம்
625.
மலையிடம்
626.
மலையுச்சி
627.
மலைவீழருவி
628.
மரத்தடி
-
629.
மரந்தலை
– மரத்தின் கீழிடம் புறம்.371-2
630.
மருதம்
631.
மலர்க்கழி
– மலர்கள் நிறைந்த கழி – பதி.64 – 16
632.
மழைக்கணம்
சேக்கும் மாமலை புறம்.131
633.
மழைதவழ்
நெடுங்கோடு – பதி.78
634.
மழைதவழும்
பெருங்குன்றம் – பதி.51 - 28
635.
மழைவிளையாடும்
வளங்கெழு சிறுமலை அகம்.47
636.
மறுகரை
637.
மறுகால்
-
638.
மறுகு
– தெரு.நற்.20-5, 114-3.
639.
மன்றம்
– அவை நற்.49-8.
640.
மன்றம்
– தொழுவம். நற்.80-1
641.
மன்றம்
– பரிசிலர் தங்கும் பொதுமன்றம். பதி.23 - 5
642.
மன்று
– மாட்டுத் தொழுவம். அகம். 4 -11, 63 – 11.
643.
மன்னிய
சோலை – மலரும் மாலையும்,பக்.107
644.
மனை
–
645.
மனையகம்
-
646.
மனையடி
–
647.
மாநிலம்
648.
மாமலர்ச்
சாரல் – மலரும் மாலையும். பக்கம் 104
649.
மானதர்
– விலங்குகள் இயங்கும் காட்டுவழி
650.
மானாவாரி
–
651.
மானாவாரிப்
புஞ்சை
652.
மானாவாரி
நஞ்சை
653.
மிசை
– மேட்டுநிலம், புறம். 102-3, 187 -2
654.
மிளை
– காவற்காடு, புறம்.31 – 5.
655.
மீமிசை
– மலையுச்சி ,புறம். 157
656.
முட்டுச்சந்து
657.
முடங்கர்
– முடுக்கு. அகம்.147 – 4.
658.
முடுக்கு
659.
முத்துக்குளித்துறை
660.
முதுகாடு
– மயானம். புறம். 356 – 4.
661.
முதைச்சுவல்
– பழங்கொல்லையாகிய மேட்டுநிலம். அகம் 88 – 1, 359-14
662.
முதையலங்காடு
– முதிர்ந்த காடு அகம்.5 - 8
663.
664.
முந்நீர்த்
துருத்தி – தீவு. பதி.20 - 2
665.
முரம்பு
– வன்னிலம் நற்.33-2, 394 – 8.
666.
முரம்பு
– பருக்கைக்கல் உள்ள மேட்டுநிலம். அகம். 133–3, 295 – 10.
667.
முரம்பு
– மேட்டு நிலம்
668.
முல்லை
–
669.
முழை
– குகை, புறம்.157
670.
முற்றம்
– புறம் 29 – 8, பதி.64 -6.
671.
முன்வாசல்
672.
முன்றில்
- மலரும் மாலையும், பக்.133.
673.
முனை
– போர்க்களம் புறம் 16-3, 33-15, 98-1
674.
முனை
– பகைப்புலம் புறம்.103-6, 210- 14.
675.
மூடு
– மரத்துமூடு, ஆலமூடு, அரசமூடு, படர்ந்தாலமூடு, அஞ்சாலமூடு
676.
மூரி
எக்கர் – பெரிய மணல்மேடு, நற்.208
677.
மூலிகைத்
தோட்டம்
678.
மூலிகை
வனம்
679.
மூலைமுடுக்கு
- மலரும் மாலையும், பக். 112.
680.
மெய்யாடு
பறந்தலை – பதி.35 – 6.
681.
மென்பால்
– மருதநிலம். புறம் 384 -1, பதி.75 - 8
682.
மேடு
683.
மேட்டுநிலம்
மலரும் மாலையும், பக்105.
684.
மேய்கால்
685.
மேய்ச்சல்
நிலம்
686.
மேய்புலம்
687.
மைந்துடை
ஆரெயில் – பதி.62 - 4
688.
மைபடுபரப்பு
– கடுமை உண்டான கடற்பரப்பு
689.
மைபடு
மலர்க்கழி – கரிய மலர்கள் பூத்த கழி, பதி.64 – 16.
690.
மோர்மடம்
691.
யானைக்காடு
692.
ரப்பர்
தோட்டம்
693.
வடகரை
694.
வடபுலம்
695.
வண்டிப்பாட்டை
696.
வண்டிப்பேட்டை
697.
வயல்
-
698.
வரை
– மலை. நற்.2 – 10, 14-10, 51-3
699.
வரைப்பு
– எல்லை, நீள்நகர் வரைப்பின் – நீண்ட அரண்மனை எல்லையில், பதி. 68 – 16.
700.
வரைபோல்
இஞ்சி, பதி. 62 – 10
701.
வரைமிசை
அருவி – பதி. 69 – 2
702.
வரையகம்
– பெருமலை, பதி. 74 – 7.
703.
வளம்
வீங்கு இருக்கை – வளம் பெருகிய ஊர், பதி.75 - 7
704.
வளனுடைச்
செறு – வளமிக்க வயல், பதி.62 - 14
705.
வளாகம்
–
706.
வளைகுடா
707.
வன்புலம்
– வலிய நிலம். அகம். 79 -5.
708.
வன்புலம்
– குறிஞ்சி நிலம் அகம்.309 – 12.
709.
வன்பால்
– முல்லைநிலம் புறம்.384 – 4
710.
வன்பால்
– பாலை. நற்.394-5
711.
வன்புசேர்
இருக்கை – வலிய நிலம் மீதமைந்த வீடுகள், பதி.30-23
712.
வனம்
713.
வனாந்திரம்
714.
வாடிவாசல்
715.
வாசல்
716.
வாயிற்படி
- மலரும் மாலையும், பக்.133. வாயிற்படியில் வாடி வதங்கி
717.
வாவிக்கரை
- மலரும் மாலையும், பக். 167
718.
வாழ்
– வயல் பதி.18.11
719.
வாழ்நிலம்
- மலரும் மாலையும், பக்.156
720.
வானுயர்
கா – மலரும் மாலையும், பக். 105
721.
விடர்
– மலைப்பிளவு நற். 14-30, 51 – 2, 116 -8,
722.
விடர்
– மலைக்குகை அகம். 22-12.
723.
விடர்
முழை – மலைக்குகை, புறம்.157
724.
வியன்ஞாலம்
–
725.
வியன்காடு
– பதி.41 -13
726.
விரிநீர்
727.
விரிநீர்
வையகம் நற்.130
728.
விரிவிடம்
- மலரும் மாலையும், பக்.133, பக்.136
729.
விழவுக்களம்
– விழா நடக்கும் இடம்
730.
விழவு
வீற்றிருந்த வியலுள் – விழா நடைபெறுகின்ற அகன்ற இடமுள்ள ஊர், பதி.56 - 1
731.
விளை
– தோப்பு
732.
விளைநிலம்
-
733.
விளைவயல்
– விளைச்சலுள்ள வயல் புறம் 16 -4.
734.
வினைபுனை
நல்லில்-ஓவத்தன்ன வினைபுனை நல்லில் பதி.61- 3
735.
வீடு
. மலரும் மாலையும், பக்.133
736.
வெக்கை
– நெற்போரடிக்கும் களம், பதி.71 -3
737.
வெந்திறல்
கனலியொடு மதிவலம் திரிதரும் தண்கடல் வரைப்பு பெரும். 17 - 18.
738.
வெள்வரகு
உழுத கொள்ளுடைக் கரம்பை – வரகும் கொள்ளும் பயிராகியுள்ள காட்டு நிலம். பதி.75 -11
739.
வெள்ளியம்பலம்
– சிலப்பதிகாரம்.
740.
வெற்பு
– மலை, புறம்.336-9 அகம். 47-17
741.
வேலி
742.
வேலிக்கரை
743.
வேரடி
நிலம்
744.
வேறுபடு
நனந்தலை – வேறுபட்ட அகன்ற காடு, பதி. 74. - 27
745.
வேறு
புலம் – வேற்று நாடு, பதி.71. 18
746.
வைப்பு
– இடம், ஊர். பதி.30 -13
747.
ஜமீன்
நிலம்