Thursday 31 May 2018

சுவர் வகை

சுவர் வகை
மதில் – அரண்மனை, கோயில், நகர் போன்றவற்றைச் சுற்றிப் பாதுகாப்புக்காக எளிதில் ஏறமுடியாதவாறு, உயரமாக அமைக்கப்பட்ட சுவர்.
இஞ்சி – பெருங்கற்களுக்கிடையே செம்பு வார்த்து உருக்கி ஊற்றி உறுதியாக அமைக்கப்பட்ட மதில்
எயில் – கோட்டைச் சுவர், மதில்
கட்டை மண் சுவர் – வீடு, களம் அல்லது சிறு மைதானத்தைச் சுற்றி வெறும் மண்ணைக் குழைத்து கழுத்தளவு உயரத்திற்கு மேற்படாதவாறு அமைக்கப்படுகின்ற மண் சுவர்.
மண்சுவர் – முழுவதும் மண்ணால் கட்டப்படும் சுவர் ; கற்களும் மண்சாந்துமிட்டுக் கட்டப்படும் சுவரும் மண்சுவர் என்றே அழைக்கப்படுகிறது.
கற்சுவர் – கற்களை அடுக்கிக் கட்டப்படும் சுவர்
செங்கல் சுவர் – சுட்ட செங்கல் பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்
பச்சவெட்டுக்கல் சுவர் – சுடாத செங்கல் கொண்டு கட்டப்பட்ட சுவர் (Adobe wall - wall built with sun -dried bricks)
காரைச் சுவர் – சுண்ணாம்புக்காரையைச் சாந்தாகப் பயன்படுத்திக்கட்டப்பட்ட சுவர்
சுண்ணாம்புச் சுவர் – செங்கல் அல்லது கற்களுக்கிடையிலான சந்துகளில் சுண்ணாம்புக் காரையினைச் சாந்தாகப் பயன்படுத்திக் கட்டப்பட்ட சுவர்
சிமெண்ட் சுவர் – செங்கல், கற்களுக்கிடையில் சிமென்ட் காரையினைச் சாந்தாகப் பயன்படுத்திக் கட்டப்பட்ட சுவர்.
சுற்றுச் சுவர் – வீடு, அலுவலகம் மற்றும் கட்டிடங்களுக்கு வெளியே அதனைச் சுற்றி அமைக்கப்படும் சுவர்
கோட்டைச் சுவர் – கோட்டையைச் சுற்றிக்கட்டப்பட்ட சுவர்; பிற்காலத்தில் கோட்டை மதில் போல உயரமாகக் கட்டப்படும் சுற்றுச் சுவர், கோட்டைச் சுவர் என்று அழைக்கப்படுகிறது.
பிள்ளைச் சுவர் – ஒரே அறையினை இரண்டாகப் பிரிக்கின்ற இடுப்பளவு உயரமேயுள்ள சுவர்
கைப்பிடிச் சுவர் – கிணற்றினைச் சுற்றி அமைப்பது (parapet wall) சாய்வான படிக்கட்டுகள், பால்கனி என்னும் மாடம் போன்றவற்றின் ஓரம் கைத்தாங்கலாக அமைக்கப்படும் சுவர்
அணைச்சுவர் – கட்டிடத்தை ஒட்டி சுவரின் பாதுகாப்புக்காக, அதை அணைத்தாற்போல் கட்டப்படும் சிறுசுவர் (buttress)
இடைச் சுவர் – தொழுவம், லாயத்தில் நடுநடுவே அமைக்கும் சுவர், அரங்கம் போன்றவற்றில் வகுப்பு வாரியாகப் பிரிப்பதற்காக அமைக்கப்படும் சுவர்கள்
மாடச் சுவர் – மாடம் அமைந்த சுவர்
தட்டட்டிச் சுவர் – தட்டட்டி(மாடித் தாழ்வாரம்)யினை அமைக்கும் சுவர்.
குட்டிச் சுவர் – இடிந்த சுவர், பயனிழந்த சுவர்;
ஆறு, குளத்தங்கரைச் சுவர்
அணைக்கரைச் சுவர்
தடுப்புச் சுவர் –
தீண்டாமைச் சுவர் – மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்கள் நுழையாமலிருப்பதற்கென அமைத்த சுவர் தீண்டாமைச் சுவர் என அழைக்கப்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அந்தச் சுவர் இடிக்கப்பட்டது.
கண்ணாடிச் சுவர் –
கல்மரச்சுவர் - இமாசலப் பிரதேசப்பகுதிகளில் கல்லும் மரக்கட்டைகளும் மட்டும் கொண்டு அமைக்கப்படும் சுவர்.
முகநூல் பதிவு 29.05.2018

No comments:

Post a Comment