Wednesday 3 February 2016

ஆக்டேவியா பாஸ் கவிதைகள் = பாலம் - The Bridge - Poem by Octavio Paz

பாலம் – ஆக்டேவியா பாஸ் கவிதை

 Image result for octavio paz


இந்தக் கணத்திற்கும் இந்தக் கணத்திற்கும் இடையே,
நானாக இருக்கும் எனக்கும் நீங்களாக இருக்கும் உங்களுக்கும் இடையே,
வார்த்தைப்பாலம்.
அதனுள் நுழைவதன் மூலம்
நீங்கள் உங்களுக்குள்ளாகவே நுழைகிறீர்கள்.
உலகம் இணைக்கிறது.
ஒரு வளையம் போல மூடிக்கொள்கிறது.

ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு
எப்போதுமே
உடலொன்று நீட்சியாகியிருக்கிறது :
வானவில்.
அதன் வளைவுகளுக்கடியில் நான் உறக்கம் கொள்வேன்.

                       -    தமிழில் ச.ஆறுமுகம்

The Bridge - Poem by Octavio Paz

Between now and now,
between I am and you are,
the word bridge.

Entering it
you enter yourself:
the world connects
and closes like a ring.

From one bank to another,
there is always
a body stretched:
a rainbow.
I'll sleep beneath its arches. 



No comments:

Post a Comment