Monday, 1 February 2016

ஆக்டேவியா பாஸ் கவிதைகள் - இரண்டு உடல்கள் - Two Bodies

Two Bodies by Octavio Paz

Two bodies face to face
are at times two waves
and night is an ocean.

Two bodies face to face
are at times two stones                       
and night is a desert.

Two bodies face to face
are at times two roots
laced into night.

Two bodies face to face                 
are at times two knives
and night strikes sparks.

Two bodies face to face
are two stars falling
in an empty sky.

இரண்டு உடல்கள்
-    ஆக்டேவியா பாஸ்
இரண்டு உடல்கள், முகத்தோடு முகம் நோக்கும்போது
சிலவேளைகளில் இரண்டு அலைகளாகின்றன
இரவோ பெருங்கடலாகின்றது.
 
இரண்டு உடல்கள், முகத்தோடு முகம் நோக்கும்போது
சிலவேளைகளில் இரண்டு கற்களாகின்றன
இரவோ பாலைவனமாகின்றது.

இரண்டு உடல்கள், முகத்தோடு முகம் நோக்கும்போது
சிலவேளைகளில் இரண்டு வேர்களாகி,
இரவுக்குள் பின்னிப்பிணைகின்றன .

இரண்டு உடல்கள், முகத்தோடு முகம் நோக்கும்போது
சிலவேளைகளில் இரண்டு கத்திகளாகின்றன
இரவோ பொறி பறக்கின்றது.

இரண்டு உடல்கள், முகத்தோடு முகம் நோக்கும்போது
வெற்று இரவுக்குள்
உருகிப் பாயும் இரண்டு வெள்ளிகளாகின்றன.

-    தமிழில் ச.ஆறுமுகம்

No comments:

Post a Comment