Monday, 1 February 2016

ஆக்டேவியா பாஸ் கவிதைகள் - உச்சிமாநாடும் புவியீர்ப்பும் - SUMMIT and GRAVITY By Octavio Paz



உச்சிமாநாடும் புவியீர்ப்பும்

- ஆக்டேவியா பாஸ்

அசைவற்ற மரமொன்றும்
பிறிதொன்றுமாக முன்னோக்கி வருகின்றன
மரங்களின் ஆறு ஒன்று
என் நெஞ்சில் பாய்கிறது.
பசுமை அலை
நல்லதொரு அறிகுறி
நீங்கள் சிவப்பினை அணிந்திருக்கிறீர்கள்
நீங்கள் தாம்
அந்த எரிக்கும் ஆண்டின் முத்திரை
மனிதக் காளவாய்
நட்சத்திர விளிம்பிப் பழம்
அந்த நாள், சூரியனைப் போல
ஆழத்தெளிவுக் குழிகளின் மேலாக
உங்களுக்குள் கனல்கிறது
இடைப்பட்ட உயரம் முழுதும் மேகப்பறவைகள்.
அவற்றின்
அலகுகள் கட்டும் இரவில்
இறகுகளோ ஒளிமகுடத்தில்
மின்னும் பகலைச் சுமந்துசெல்கின்றன
உறுதிப்பாட்டுக்கும் தலைசுற்றலுக்கும் நடுவில்
நீங்களோ
பளிங்குச் சமநிலை
-    தமிழில் ச.ஆறுமுகம்

SUMMIT and  GRAVITY   By Octavio Paz
There's a motionless tree
And another one coming forward
A river of trees
Hits my chest
The green surge
Is good fortune
You are dressed in red
You are
The seal of the scorched year
The carnal firebrand
The star fruit
In you like sun
The hour rests
Above an abyss of clarities
The height is clouded by birds
Their beaks construct the night
Their wings carry the day
Planted in the crest of light
Between firmness and vertigo
You are
Transparent balance 





No comments:

Post a Comment